ஏழு சபைக் காலங்கள் THE SEVEN CHURCH AGES பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா அமெரிக்கா 54-05-12 கர்த்தராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம். இந்த இரவுகளின் ஆராதனைக்காக நான் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு எதிர்நோக்கிக் கொண்டு, அதை எப்படியாவது, ஏதோ ஒரு வழியில், நம்முடைய பரலோகப் பிதா புன்னகை புரிந்து தம்முடைய ஆசீர்வாதங்களை நமக்கு அருளுவார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் இந்தச் சபையில் நடைபெறும் இந்த ஆராதனைகளை இங்கே நடத்த இங்கே சபையின் அங்கத்தினர்களாகிய குழுவினரோடும், சிறு குழுவாகிய உங்களோடும், வருகையாளர்களோடும், நிச்சயமாகவே, எனக்கு ஒரு தருணம் கிடைக்கிறது. 2 இது அறிவிக்கப்படவில்லை. அது ஒரு வழக்கமான புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டமாயிருந்தது. மேலும் நான், "ஒருவேளை இன்றிரவே நாம் திரும்பி வரலாமா என்று கண்டறியலாம்" என்றேன். நாம் அதை எடுத்துக் கொள்ளலாம் என்று நான் நினைத்தேன், அடுத்த வாரத்தில் அதை அறிவிக்கலாம், ஏன், அது... நாம் இங்கு அதிகமான ஜனங்களை உட்கார வைக்க முடியாது. 3 தேவனுக்குச் சித்தமானால், இந்த விதமான ஆராதனைகள் நடத்தப்படுவதில்லை...அது சபையின் நன்மைக்காக, சபையை நோக்கி நடத்தப்படுகிறது கிறிஸ்துவினுடைய சரீரம் பக்தி விருத்தி யடைவதற்கென, எங்கும்...அது மிகவும் அவசியமாயுள்ளது என்பதை நாங்கள் உணருகிறோம். மேலும், இப்பொழுது இது போதனையில் உள்ளது. நான் தொடர்ந்து எட்டு வருடங்களாகச் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தி வருகிறேன்; அதன்பின்னர், போதித்தல், அது ஒருவிதமான புதியதாக இருக்கப்போகிறது. 4 நான் இன்று பிற்பகல், நாள் முழுவதும் மிகவும் மும்முரமாக இருந்துவிட்டு, வேதத்தைத் திறந்து பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான், "கர்த்தருக்குச் சித்தமானால், ஏழு சபைக் காலங்களின் பேரில் நான் போதிப்பேன் என்று ஜனங்களிடம் கூறினேன்" என்று எண்ணினேன். நான் அதை வாசிக்கத் துவங்கினபோது, நான் அதைப் படிக்கத் துவங்கினபோது, உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தேன். மேலும் நான், "நல்லது, என்னால் அதையெல்லாம் ஒரே இரவில், ஒரு மணி நேரத்தில் எடுத்துவிட முடியும்" என்று எண்ணினேன். 5 ஆகையால் பரிசுத்த ஆவியானவர் நம்மை என்ன செய்ய வைப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் நாம் எதையும் அமைக்க முயற்சிப்பதில்லை. அது, "கர்த்தாவே, அது உமக்குச் சித்தமானால்," பாருங்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அப்படியானால், அது கர்த்தருடைய சித்தமாயிருக்குமானால், நான் இன்றிரவு சபைக் காலங்களைக் குறித்துப் போதிக்க விரும்புகிறேன், நாளை இரவு மிருகத்தின் முத்திரை என்ற தலைப்பிலும், அதற்கு அடுத்த இரவு தேவனுடைய முத்திரை என்ற தலைப்பிலும் போதிக்க விரும்புகிறேன். அந்த... 6 அதன்பின்னர் சனிக்கிழமை, என்னே, நம்முடைய சகோதரன் வாயிற்காப்போன் இன்றைக்கு எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார், அவர், "அவர்கள் அதைச் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை வைத்திருந்தால், வழக்கமாக, அந்நியர்கள் நம் நடுவில் வரும்போது, ஏன், சபை மிகவும் அசுத்தமாயும், இன்னும் பல்வேறுப்பட்டதாயும் இருக்கும்" என்று கூறினார். 7 எனவே புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு காலை, ஞாயிறு இரவு என்று மாத்திரமே இருக்க வேண்டுமென்று அவர்கள் பரிந்துரைத்தனர். மேலும் நான், "பாருங்கள், என்னைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் சரியாயிருக்கும்" என்றேன். 8 ஆகையால் கர்த்தருக்குச் சித்தமானால், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு இரவும் அதை நடத்த முயற்சிப்போம். மேலும், ஒரு வேளை, ஞாயிறு இரவு நாம் ஒரு ஞானஸ்நான ஆராதனையை நடத்தலாம், ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதைக் குறித்து ஜனங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தனர். எனவே இப்பொழுது... 9 நாம் ஒவ்வொரு இரவும், சரியான நேரத்தில், ஏழு முப்பது மணிக்குத் துவங்க முயற்சிப்போம். நான் எட்டு மணிக்கு மேடைக்கு வந்து, கர்த்தருக்குச் சித்தமானால், நாம் ஒன்பது முப்பது மணிக்குள் கூடாரத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எனவே நீங்கள்... நீங்கள் பணிக்குச் செல்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், அதைக் குறித்து எங்களுக்கு மரியாதை உண்டு. 10 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திலிருந்து இந்தச் சிறு செய்திகள் சபைக்கு அனுப்பப்படுகின்றன. இதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளும்படி நான் விரும்புகிறேன், அதாவது அவர்கள் யாருடைய மார்க்கத்தை நோக்கியோ அல்லது வேறு எந்த நோக்கத்தை நோக்கியோ திசை திருப்பப்படுவதில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டின வரையில் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கும், அதை விளக்குவதற்கும் மாத்திரமே நான் விரும்புகிறேன். பார்த்தீர்களா? அது எந்தச் சுயநல நோக்கத்தினூடாகவும் தள்ளப்படுகிறதல்ல, அல்லது அது யாரையும் நோக்கியோ, எந்தத் தனிப்பட்ட நபரையோ அல்லது யாருடைய சபையையோ, யாருடைய மார்க்கத்தையோ நோக்கியதாயிருக்கவில்லை. 11 இந்த வெளிப்பாட்டின் பேரில் நான் இங்கே கூடாரத்தில் போதிக்க விரும்புகிற காரணம் என்னவெனில், என்னுடைய சொந்த சபையாயிருக்கிறபடியால், ஏன், நான் வீட்டில் இருப்பது போன்றே உணருகிறேன். மேலும்-மேலும், உங்களுக்குத் தெரியும், என் ஆடுகளுக்குத் தேவை என்று நான் நினைத்த ஒரு விதமான உணவை நான் கொடுக்கிறேன், உங்களுக்குத் தெரியும். இதுவரை-... 12 ஜனங்களே, உங்களுக்குத் தெரியும், அல்ஃப்ல்ஃபா என்ற உயர்ரக மணல் புல் வகை கொஞ்சம் பூசணப்பட்டிருக்கும்போது, சில சமயங்களில் அவர்கள் சிறிதளவு உப்பைப் போட வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால் அது ஆடுகளைச் சேதப்படுத்தலாம். ஆகையால், எப்பொழுதாவது ஒருமுறை, இந்த அல்ஃப்ல்ஃபா சபையைச் சுற்றிலும் சிறிது பூஞ்சை காளான் ஆகும்போது, மேலும்-மேலும் சிறு வேறுபாடுகள் தோன்றுகின்றன, எனவே ஒரு சிறு உப்பு, ஒரு மாதிரி, ஒரு ருசிகரம் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? அது ஒருவிதமாக அவர்கள் வியாதிப்படாமல் தடுக்கிறது. 13 எனவே இப்பொழுது இந்த முயற்சிகளில் தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று என்று நாங்கள் ஜெபிக்கிறோம். மேலும் எத்தனை...? ஆண்கள் மற்றும் பெண்களைப் போலவே, நம்மைப் போலவே உணர்கிறோம், நான் நாளை இரவு, "மிருகத்தின் முத்திரை என்றால் என்ன?" என்பதைக் குறித்து ஆராய விரும்புகிறேன். அதைக் குறித்து வேதாகமத்தில் ஏராளமானவைகள் உள்ளன. "அதை வைத்துள்ளது யார்? யார் அதைப் பெற்றுக்கொள்வார்கள்?" 14 அதன்பின்னர், அடுத்தது, அது நடக்கப் போகிற ஒரு நேரம் வரப்போகிறது. எனக்குத் தெரியாது, அது இப்பொழுது இருக்கலாம். நாம் நோக்கிப் பார்த்து, ஆம், அதாவது, பூமியின் மேல் இரண்டு வகுப்பினர் மாத்திரமே இருக்கப் போகிறார்கள், ஒன்று பிசாசினால் குறிக்கப்படப் போகிறது, மற்றொன்று தேவனுடைய முத்திரை. நாம் அந்த நேரத்தை நெருங்கிக்கொண்டிருப்போமானால், நாம் ஒருவிதமாகச் சுற்றும் முற்றும் பார்ப்பது நல்லது என்று, நான் நினைக்கிறேன், அது என்னவென்பதைக் கண்டறியலாம், ஏனென்றால் அது நிச்சயமாக ஏதோ ஒரு பெரிய காரியமாக மாத்திரம் உள்ளே வரப்போவதில்லை. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்" என்றும், அது மிக எளிதாக நழுவிவிடும் என்றும் வேதம் கூறியுள்ளது. ஆகையால் தேவனுக்குச் சித்தமானால், நாளை இரவு, அதை முழுவதுமாக ஆராய முயற்சிப்போம். இப்பொழுது, அதுவே என்னுடைய மிகச் சிறந்த... 15 இப்பொழுது, உங்களுடைய வேதாகமத்தையும், உங்களுடைய பென்சிலையும், காகிதத்தையும் கொண்டு வாருங்கள், நீங்கள் வேதவாக்கியங்களை குறித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். மேலும், அது முற்றிலும் சரியென்று நீங்கள் நினைக்கவில்லையென்றால், எனக்கு ஒரு சிறு குறிப்பை எழுதி, அதை அடுத்த இரவுக்காக வையுங்கள். 16 இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில், இங்கே கூடாரத்தில் ஒரு வருடம் ஆறு மாதங்கள் தங்கியிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதைத்தான் நான் போதிப்பதில் விரும்புகிறேன். நான் போதிக்க விரும்புகிறேன். ஓ, என்னே! அது அற்புதமானது என்று நான்-நான்-நான்-நான் நினைக்கிறேன். அதுவே அடிப்படையை அளித்து, சபையைத் தீர்த்து வைக்கிறது. 17 மேலும், பிரசங்கத்தில், இப்பொழுது, சில ஜனங்கள் பிரசங்கிமார்களாக இருக்கிறார்கள். அவர்களால் ஆவியின் ஏவுதலோடு, வார்த்தையை எடுத்து, அதை அங்கிருந்த இடங்களில் அசைக்க முடியும். அது ஆசிரியர் கற்பித்துள்ள விதைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல். பார்த்தீர்களா? இப்பொழுது, நீங்கள் முதலில் விதையை விதைத்து, அதன்பின்னர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பாய்ச்சுதல் வார்த்தையின் பிரசங்கத்திலிருந்து வருகிறது. 18 ஒரு போதகருக்கும் ஒரு பிரசங்கிக்கும் இடையே ஒரு பெரிய, பரந்த வித்தியாசம் உண்டு. பார்த்தீர்களா? அது இரண்டு வெவ்வேறு ஆவியின் வரங்கள், மொத்தத்தில் இரண்டு வெவ்வேறு வரங்கள். நான் இதைத் தாழ்மையாகக் கூறுகிறேன், ஆனால், எனக்கு இரண்டு வரமும் இல்லை. 19 ஆனால் என்னுடையது, வழக்கம்போல, வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருப்பதாகும். அதைச் செய்யவே கர்த்தர் என்னை அழைத்தார். அதன்பின்னர், இந்த நேரத்தில், அது என் சிந்தைக்கு ஒரு தளர்வை அளிக்கிறது, தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தாமல், வித்தியாசமான ஒன்றைப் பற்றிப் படிக்க, வெறுமனே-வெறுமனே வார்த்தையைப் போதிக்கிறோம். மேலும், ஓ, நாம் இங்கே நன்கு இணக்கமாக இருக்கிறோம். நாம்... இங்கே சுமார் பன்னிரெண்டு வருடங்களாக, நீங்கள் அதைக் குறித்து, நீண்ட காலமாக என்னோடு சகித்துக்கொண்டீர்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. 20 நான் வழக்கமாகக் கூறுவதுண்டு...அதை ஒரு கேலிக்காகப் பொருட்படுத்திக் கூறவில்லை, ஆனால், போதகம் மிகவும் கரடுமுரடாயிருக்கிறது, நான், "ஒரு நபர் மேசைக்குச் சென்று, சோள அப்பத்தையும், அவரையையும் புசிப்பது போன்றே இது உள்ளது" என்றேன். இப்பொழுது, அது உங்களுக்கு நல்லதுதான், ஆனால் அது குறித்து நீங்கள் சற்று சலிப்படைகிறீர்கள், நீங்கள் எப்பொழுதாவது ஒருமுறை, அது மட்டுமின்றி, சில ஐஸ்கிரீம் மற்றும் கேக்கை, எப்பொழுதாவது ஒருமுறை உட்கொண்டால், அது ஒருவிதமான சமநிலை உணவாய் இருக்கும். ஆனால் நல்ல பழங்காலத்து நாகரீகமான காரியம் உங்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும், மேலும், குறைந்த பட்சம், அது உங்களுக்குச் சில துவக்கத்தை அளிக்கிறது. 21 இப்பொழுது, இதில், நாம் உலக சரித்திரத்தின் முடிவின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே என்னுடைய தாழ்மையான நம்பிக்கையாகும். நான் அதை உண்மையாகவே தெளிவுபடுத்த விரும்புகிறேன். இப்பொழுது, நான் தவறாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. இயேசு, "பரலோகத்தின் தூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள்" என்றார். அவர் தாமே, அதை அறியவில்லை. அவர், "அது பிதாவின் மூலமாய் மாத்திரமே, அதை அறிந்த ஒருவர் அவர் மாத்திரமே" என்றார். ஆனால் அவர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமானதாயும், நம்பத்தக்கதாயுமுள்ளது. கர்த்தருடைய வருகையைத் தவிர...வேறொன்றும் விடப்பட்டிருப்பதை என்னால் காணமுடியவில்லை. 22 நான் நோக்கிப் பார்க்கும்போது, தேசம் நொறுங்குகிறது. அரசியல் உடைந்ததை நான் காண்கிறேன். வீடுகள் உடைக்கப்பட்டதை நான் காண்கிறேன். சபை உடைக்கப்பட்டதை நான் காண்கிறேன். நான்...வேறு ஒன்றுமே அதைச் சீர்படுத்த முடியாது, தேவனைத் தவிர, அவ்வளவுதான், ஏனென்றால் அவர்களுக்கு வேறொன்றுமில்லை. தேசத்தின் ஒழுக்கங்கள் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் நிலை குலைந்து விட்டன; நாம் நம்முடைய அரசியலில் அதிக நம்பிக்கை வைத்திருந்தோம்; அவர்கள் நிலைகுலைந்துள்ளனர். 23 அண்மையில் இங்கிலாந்தில் இருந்த ஒரு பெரிய நபர், "பாருங்கள், ஜனநாயகம் என்பது-அனைத்தும் பாய்மரங்களாக இருந்தன, நங்கூரம் இல்லை" என்றார். அதாவது, "அவர்கள் சோப்பு பெட்டிகளில் அமர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒரு நேரம் உண்டாயிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. சரி, அது உண்மை. ஆனால் அவன் தன்னுடைய சொந்த பிரியமான பாரளுமன்ற இராண்டாம் கட்ட துறைகளைக் குறித்து நினைத்துப் பார்க்கவில்லை, அது தளர்வுற்று உறுதியற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கூடப், பறந்து சென்றது. 24 இந்த உலகத்தின் ஒவ்வொரு இராஜ்ஜியமும் நொறுக்கப்படும். இயேசு கிறிஸ்து ஆளுகை செய்து, அரசாளுவார். எனவே அங்கே: என்னுடைய நம்பிக்கைகள் இயேசுவின் இரத்தத்திலும், நீதியிலும் தவிர, எந்த ஒன்றின் பேரிலும் கட்டப்பட்டிருக்கவில்லை என் ஆத்துமாவைச் சுற்றிலுமுள்ள யாவும் வழிவிட்டு, அவரே என்னுடைய எல்லா நம்பிக்கையும், தங்குமிடமுமாயிருக்கிறார். திடமான கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நான் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாகவே உள்ளது. 25 மேலும், ஓ, நாம் இப்பொழுது ஏறக்குறைய மூன்று மாத போதக ஆராதனையை தொடங்கியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எனவே நீங்கள் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்குள்ளாகச் சென்று அதைத் தானியேலுடன், அந்த மகத்தான தரிசனத்தோடு இணைத்துக் கொள்ள முடியும். 26 இங்குள்ள சிறு மந்தையில், நான் பழைய விளக்கப்படத்தை இங்கே வைத்திருந்தபோது, நினைவில் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் மீதமிருக்கிறார்கள்? சகோதரன் ஹெட் அவர் இருந்தார் என்பதை நான் அறிவேன், நான் அந்தப் பழைய விளக்கப்படத்தைப் பெற்றிருந்தபோது, உங்களில் அநேகர் இங்கே இருந்தோம். 27 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம், அது எப்படி எழுதப்பட்டிருக்கிறது. தானியேலும் அதனோடு இணைந்து கொள்கிறான். ஏசாயாவும் அதனோடு இணைகிறான். பழைய ஏற்பாடு யாவும் அதனோடு இணைந்துள்ளன. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமாகும். பார்த்தீர்களா? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தின புத்தகம். 28 அதன்பின்னர், அங்கே ஏழு சபைகள், ஏழு வாதைகள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள் உள்ளன. இப்பொழுது, ஒரு எக்காளம் போரைக் குறிக்கிறது; ஒரு முத்திரை, ஒரு இரகசியம்... வெளிப்படுதல்; ஒரு வாதை ஒவ்வொரு யுத்தத்தையும் தொடர்ந்து வருகிறது. 29 தேவனுடைய உதவியைக் கொண்டு, சரித்திரப் புத்தகத்தைக் கொண்டு, நாம் ஏழாம் எக்காளத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும், ஏழாம் முத்திரை திறக்கப்படுவதற்காகவும், ஏழாம் கலசத்தில் ஊற்றப்படுவதற்காகவும் என்பதை, என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும். 30 ஆறாவது தொனிக்கும்போது; நாம் வெள்ளிக் கிழமை இரவு, ஒருவேளை, முத்திரையிடுதலைப் பற்றிப் பேசலாம். முதலாம் உலகப் போரின்போது, ஏன்...அதாவது தேவன் அதைக் குறித்து உரைத்த நேரத்தின்படியே, சரியாக ஆறாம் எக்காளம் முழங்கினது. சரியாக, புவியியல் ரீதியாக, அதற்கு முன்பிருந்த முத்திரையைப் பின்பற்றுகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கான இரகசியம் அங்கே வெளிப்படுத்தப்பட்டபோது, அப்பொழுது ஜனங்கள், சபையானது எவ்வாறு முன்னேறிச் செல்லவில்லை என்பதையும், அசைந்து கொண்டிருந்தவர்களும் ஒளியில் நடக்க மறுத்து, திரும்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வாதை திறக்கப்பட்டு, பூமியின் மேல் ஊற்றப்பட்டது, அது சளிக் காய்ச்சல், அது எல்லா ஜனங்களையும் கொன்றது போல, ஆயிரமாயிரம் பேர்களையும் கொன்று போட்டது. 31 அதன்பின்னர் நாம் இங்கே இருக்கின்ற இந்தக் கடைசி காலத்திற்குள் வருகிறோம். கர்த்தர் தம்முடைய வார்த்தையில் அதைக் குறித்து என்ன கூறுகிறார் என்பதை வந்து கேளுங்கள். இப்பொழுது, அது என்னுடைய குணாதிசயம் அல்ல. நான் அதைச் செய்தித்தாள்களைப் போன்று தேவனுடைய வார்த்தையிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே, இது சபைக்கு, சபைக்கு அவருடைய நேரடி வெளிப்பாடாய் உள்ளது, சபைக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல். 32 இப்பொழுது, நாம் அவரிடத்தில் பேசுவதற்கு முன்பு அல்லது அவருடைய எழுத்தைக் குறித்து பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைகளை வணங்கி, ஜெபத்தில் சற்று நேரம் அவரிடத்தில் பேசுவோமாக. 33 எங்கள் தயவுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் எங்கள் தலைகளை மண்ணை நோக்கிப் பணிவுடன் வணங்கும்போது, அங்கிருந்து நாங்கள் எடுக்கப்பட்டோம் என்றும், நீர் வரத் தாமதித்தால், என்றோ ஒரு நாள் திரும்புவோம். எங்களை ஆசீர்வதிக்க இன்றிரவு நீர் எங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையுடன் வணங்குகிறோம். இந்த வேதாகமத்தின் பக்கங்களை என்னால் பின்னுக்குத் தள்ள முடியும், ஆனால் புஸ்தகத்தைத் திறக்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் ஒரு மனிதனும் இல்லை. மேலும் அது இங்கே "இதிலிருந்து எடுக்கிறவன் ஜீவ புஸ்தகத்திலிருந்து, தன் பங்கிலிருந்து எடுக்கப்படுவான்; அதனோடு கூட்டுகிறவன் மேல் தேவனுடைய வாதைகள் ஊற்றப்படும்" என்றும் எழுதப்பட்டுள்ளது. 34 பிதாவே, இன்றிரவு இங்கே உட்கார்ந்திருக்கிற சாவுக்கேதுவான மனிதர்களும், ஸ்திரீகளும், நாங்கள் நித்தியத்திற்குட்பட்ட ஜனங்கள் என்பதை உணர்ந்து, அறிந்துள்ளபடியால், தேவனே, இந்த வேதாகமத்தை எழுதியவரான பரிசுத்த ஆவியானவர் வந்து, இந்தப் பக்கங்களை எங்களுக்குத் திறந்து கொடுப்பாராக. உம்முடைய தாழ்மையான, பயனற்ற ஊழியக்காரன் மரித்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப் போல, மரிக்கும் மனிதர்களுக்குப் பிரசங்கிக்கட்டும், இது கடைசி ஆராதனையாக இருக்கும் என்பது போல, நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் நான் நடத்தும் கடைசி ஆராதனை இதுவாகத்தான் இருக்கும், நாம் ஒன்றாகக்கூடும் கடைசி இரவு இதுவாகத்தான் இருக்கும் என்பது போலக் கூடுவோமாக. சபையில் ஒவ்வொருவரும் இன்றிரவு அவர்கள் கேட்கும் அவர்களுடைய கடைசி பிரசங்கம் என்பது போன்று நடந்து கொள்வார்களாக. தேவனே, எல்லா முட்டாள்தனத்தையும் எடுத்துப் போடும். என்றோ ஒரு நாள் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதை அறிந்து, எங்களை உத்தமமுள்ளவர்களாக்கும். இப்பொழுது அவர் மற்றும் அவருடைய வார்த்தையைக் குறித்த எங்களுடைய மனப்பான்மையே எங்களுடைய நித்திய பயண இலக்கைத் தீர்மானிக்கும். 35 எனவே பிதாவே, நடுங்கும் இருதயங்களோடு நாங்கள் உம்மண்டை வந்து கேட்கிறோம். கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியின் ரூபத்தில், இன்றிரவு, தேவனுடைய வார்த்தையை எடுத்து, எங்களுடைய தேவைக்கேற்ப ஒவ்வொரு இருதயத்திற்கும் அதைக் கொடுப்பாராக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 36 இப்பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு, போதிக்க ஒரு பொருளைத் திறக்கத் துவங்க முயற்சிப்பது எனக்குச் சற்று விநோதமாகத் தென்படலாம். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக அது எப்பொழுதுமே தெய்வீக சுகமளித்தலின் பேரிலிருந்து வருகிறது, அதன்பின்னர், இல்லை, தீர்க்கதரிசனத்தின் பேரில் அல்ல. அதன்பின்னர்-அதன்பின்னர் நேராக ஒரு ஜெப வரிசையில் செல்ல வேண்டும். 37 ஆனால் இப்பொழுது, இன்றிரவு, தேவன் நமக்காக திறக்கும்படி நாங்கள் வேண்டிக் கொண்டிருக்கிற புத்தகத்தின் பின்னணியை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம், அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தின விசேஷப் புத்தகமாகும். 38 எழுத்தாளர்களின் கூற்றுப்படி, இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட கி.பி. 96-ல் அது அன்பார்ந்த யோவானால் எழுதப்பட்டது. 39 ஏஜியன் சமுத்திரத்திலுள்ள பத்மு தீவில் அவன் இந்தத் தரிசனத்தைக் கண்டான், சுமார் பதினைந்து மைல்கள் அல்லது ஏதோ ஒன்று, அதைச் சுற்றிலும், சுற்றளவு கொண்ட ஒரு பாறைகள் மிகுந்த இடம், சர்ப்பங்கள் போன்றவை நிறைந்திருந்தன, ரோம தேசம் அதை ஒரு அல்காட்ராஸாக என்ற தீவைப் போல உபயோகிக்கிறது, இன்றைக்கு நாம் அதை வைத்திருப்பது போல, அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்ட ஒரு இடம். 40 இந்தப் புஸ்தகம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கடைசி அப்போஸ்தலர்களில் ஒருவனால் எழுதப்பட்டது, உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய மார்பில் சாய்ந்த அன்பானவன் என்று நம்பப்பட்டது; அப்பொழுது அவர், "நான் வருமளவும் இவனிருக்க சித்தமானால், உனக்கென்ன?" என்று கேட்டார். யோவான் ஒரு வயோதிக மனிதனாக, மரித்துப் போனான். இரத்த சாட்சிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த இரத்தத்தினால் தங்களுடைய சாட்சியை முத்திரையிட்டனர். 41 யோவானின் முடிவு இந்த விதமாகச் சந்திக்கப்பட்டது: அவன் பிடிபட்டு, ஒரு கொழு கொப்பரையில் இருபத்தி நான்கு மணி நேரம் கொதிக்க வைக்கப்பட்டு, கொதிநிலை கொழுந்துவிட்டெரிந்தும், அவனுக்கு எந்தத் தீங்கும் உண்டாக்கவில்லை. அவர்கள் அவனை அந்தத் தீவில், பொதுவாக நம்பப்படுவது போல், ஒரு சூனியக்காரன் என்று வைத்தார்கள், அவர்கள், "அந்த எண்ணெய் அவனை எரித்துவிடாதபடிக்கு அவன் அந்த எண்ணெயைச் சூனியம் செய்தான்" என்றனர். உண்மையாகவே அது தேவனுடைய வல்லமையாயிருந்தது. நீங்கள் ஒரு மனிதனிலிருந்து பரிசுத்த ஆவியைக் கொதிக்க வைத்து எடுக்க முடியாது. ஏன்! எனவே அவர்கள் அவனிடத்திலிருந்து அதைக் கொதிக்க வைக்க முயன்றனர், ஆனால் தேவன் அதை அனுமதிக்கவில்லை. அவன் செய்ய வேண்டிய ஒரு பணியை அவர் உடையவராயிருந்தார். தேவன் தம்முடைய மனிதனைக் கொண்டு முடிக்கும் வரையில், உலகத்தில் அவனைத் தொல்லைப்படுத்தக் கூடியது ஒன்றுமேயில்லை. அவ்வளவுதான். 42 இப்பொழுது, யோவான் வயோதிகனாயிருந்தபடியால், அவன்...அவன் சபைக்குப் பிரசங்கிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டான் என்று சரித்திர ஆசிரியர்களால் கூறப்பட்டிருக்கிறது. அவன் மிகவும் வயோதிக னாயிருந்தான், அப்பொழுது அவன், "பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" என்று மாத்திரமே கூறுவான். 43 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதைக் குறித்து பிரசங்கிப்பது ஒரு மிக நல்ல காரியம். "பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்." எனக்கு வயதாகும்போது, இப்பொழுது ஊழியத்தில், என்னுடைய...கிட்டத்தட்ட என்னுடைய இருபத்தியொன்றாம் வயதில் நான் இருக்கிறேன். நான் தொடர்ந்து செல்லும்போது, இந்த...கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நான் எவ்வளவாய் நினைக்கிறேனோ, அவ்வளவாய் அன்பு முழு காரியத்தையும் உள்ளடக்கியதாயிருக்கிறது என்பதை நான் கண்டறியத் துவங்குகிறேன். "தேவனுடைய அன்பு, பரிசுத்த ஆவியினாலே எங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது." 44 இப்பொழுது நாம் இங்கே ஒரு சில வசனங்களை வாசிக்கத் தொடங்குவோம், அதன்பின்னர் நாம் சபையின் போதனைக்குள் செல்வோம். பின்னர் அதை ஒரு இடத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்வோம், தேவனுக்குச் சித்தமானால், எனக்குள்ள இந்த நேரத்தில், நாளை இரவு, இந்த மிருகத்தின் முத்திரை என்ற தலைப்பில், எங்கு எடுத்துச் செல்ல முடியுமோ அங்கு எடுத்துச் செல்லலாம். 45 இப்பொழுது, இது சபைக்கானதாயுள்ளது. இப்போது, குறைந்தபட்சம், முதல் சபையான, எபேசு சபையையாவது, நான் பார்க்க முயற்சிக்கப் போகிறேன், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசி சபை, லவோதிக்கேயா சபை. சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக் காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். 46 இப்பொழுது, வேதம் இங்கே நமக்கு ஒரு துவக்கத்தை அளிக்கிறது. அது, "வெளிப்படுத்தின விசேஷம்..." இல்லை, வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு "வெளிப்படுத்தப்பட்ட ஏதோ ஒன்று" என்று பொருள். "இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்" யோவானுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் குறித்து சாட்சி கொடுக்க அல்லது அதை அடையாளங்காட்ட ஒரு தூதன் அனுப்பப்பட்டான். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். வாசிக்கிறவனும்...பாக்கியவான்கள். 47 எத்தனை பேர் ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? அப்படியானால், அதைப் படியுங்கள். பாருங்கள், "வாசிக்கிறவனும்." இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 48 வேறு வார்த்தைகளில் கூறினால், அப்பொழுது சமீபமாயிருக்கிற நேரம் அல்ல, ஆனால், "இந்த வார்த்தை நிறைவேறுவதை அவர்கள் காணும்போது, முழுமையான வெளிப்படுத்துதல் வரும்போது, காலம் சமீபமாயிருக்கிறது." 49 தேவன் துவங்கினபோது, ஒரு ஓவியன் ஏதோ ஒரு படத்தை வரைந்து கொண்டிருப்பது போல, அவர் தம்முடைய பாகங்களை நிரப்பத் துவங்குகிறார். அது உருவாகுவதை நீங்கள் காணத் துவங்கலாம். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முதலாம் பாகத்தில் துவங்கும்போது, இயேசு கிறிஸ்து காட்சியில் வரத் துவங்குவதை நீங்கள் காண்கிறீர்கள். அதன் கடைசியில், நீங்கள் அவர் முழுமையாய், அவருடைய சபையோடு அமர்ந்து மகிமைப்படுத்தப்படுவதைக் காண்கிறீர்கள், எல்லா பாவத்தின் நாட்களும், தொல்லைகளும், சோதனைகளும் முடிந்துவிட்டன, கிறிஸ்து தம்முடைய சபையோடு மேலே மகத்தான பரலோகத்தில் வீற்றிருக்கிறார். 50 சரி, 4-ம் வசனம். கவனியுங்கள். "யோவான் சபைகளுக்கு..." இப்பொழுது, இது யோவான் பேசுவதாகும். முதலாவதாகத் தேவன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை அறிமுகப்படுத்தினார். இரண்டாவது: யோவான் ஆசியாவிலுள்ள...சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 51 ஓ, நாம் இங்கே ஒரு சிறு ஓவியத்தை வரையும்படி இப்பொழுது ஒரு கரும்பலகையை வைத்திருந்தால், பாருங்கள், "தேவனுக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகள்" 52 இப்பொழுது, சிறிது நேரத்தை மிச்சப்படுத்த, உலகத்தில் உள்ள எந்தக் காரியத்திற்காகவும், நான் எந்தக் காரியத்தையும் தவறாக மேற்கோள் காட்டமாட்டேன் என்று அறிந்திருக்கிறேன்...நான் அதை நம்புகிறேன். அதைக் குறித்து உங்களுக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தால், அதைக் குறித்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் என்னிடத்தில் கேளுங்கள், நான் அதற்கான வேதவாக்கியத்தை உங்களுக்குத் தருவேன். இப்பொழுது நாம் இதற்குள்ளாக விரைந்து செல்ல வேண்டியதாயுள்ளது, இந்த நேரம் மிகவும் நெருக்கமாக உள்ளதால்... 53 இப்பொழுது, "தேவனுக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகள்." இந்த ஏழு ஆவிகள் ஏழு சபைக் காலங்களுக்கு அனுப்பப்படும் ஏழு ஆவிகளாகச் சுட்டிக்காட்டப்பட்டன. "தேவனுக்கு முன்பாக ஏழு ஆவிகள்." நமக்கு நேரமிருந்தால், நாம் பழைய ஏற்பாட்டிலிருந்து அதை எடுத்து, அங்கே அதை எடுத்துக் கொள்ளலாம். 54 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி... என்னே, யோவான் நோக்கிப் பார்த்தபோது, நிலைகுலைந்து போனதைப் பாருங்கள்! அவன் பேசிக்கொண்டே சென்று, அவன் கூறினான்: நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 55 "தேவனுக்கென்று எங்களை ஆசாரியர்களும், ராஜாக்களுமாக்கினார்." "நாம்" என்பது பன்மை. "என்னை ஆசாரியனும், ஒரு ராஜாவுமாக ஆக்கினார்" என்றல்ல. ஆனால், "நம்மை ஆக்கினார்," சபை. 56 இப்பொழுது, அவன் இந்த ஏழு சபைகளைக் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறான், ஏனென்றால் அது ஏழு சபைக் காலங்களைப் பற்றியது. 57 இப்பொழுது, அவன், "மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக." என்றான். 58 "நம்மை ஆசாரியர்களாக்கியிருக்கிறார." ஒரு ஆசாரியன் என்றால் என்ன என்றும், அவனுடைய உத்தியோகம் என்ன என்பதையும் நீங்கள் எப்போதாவது அறிந்திருக்கிறீர்களா? ஒரு ஆசாரியன் பலி செலுத்த வேண்டும், பரிந்து பேச வேண்டும். எபிரெயரில், சபையாகிய, நாம், ராஜரீக ஆசாரியக்கூட்டம் என்று கூறப்பட்டுள்ளது, "ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." பார்த்தீர்களா? "பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் இருக்கிறீர்கள்." "பலி," இங்கே அது இப்பொழுது உள்ளது: "ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல்," தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும் திரைக்குள்ளாகப் பிரவேசிக்கிறார்கள். 59 பழைய ஏற்பாட்டில், ஒரு...பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்த ஒரு திரை இருந்தது. ஆரோன் மாத்திரமே வருடத்திற்கு ஒருமுறை அங்கு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆனால் ஒரு ஆசாரியனான ஒவ்வொரு மனிதனும், அதைச் சற்று சுவைக்கலாம், அல்லது முதல் நாள் வானத்திலிருந்து மன்னா விழத் துவங்கினபோது மோசேயும் ஆரோனும் எடுத்த மூல மன்னாவை ருசி பார்த்தனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தபோது... 60 அவர்களுக்குப் பின்னால் இருந்த சத்துருக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் வெளியே சென்றபோது, நிலம் முழுவதிலும் சிறு அப்பத் துண்டுகள் கிடந்தன. தேவன் வானத்திலிருந்து அதைப் பொழிந்தார். அவர்கள் அதை "மன்னா" என்று அழைத்தனர். "மன்னா," தேன் போலச் சுவைத்தது. ஜனங்கள் அந்த ஒரு நாளுக்காகப் போதுமான அளவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அதை வைத்திருந்தால், அது மாசுபட்டிருக்கும். 61 தேவன் மோசேயும், ஆரோனும் வெளியே போய், பல ஓமர்- நிறைய பெரிய கூடைகளில் எடுத்து, பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள உடன்படிக்கைப் பெட்டியில்...இதை வைக்கும் படி சொன்னார். 62 அங்கே, அதாவது, அந்தச் சந்ததிக்குப் பிறகு ஒவ்வொரு முறையும், அந்த ஒன்றைப் பின்தொடரும் ஒவ்வொரு தலைமுறையும், நான் எண்ணுகிறேன், அந்த லேவிய ஆசாரியத்துவம் நீடித்திருக்கும் வரைக்கும், ஒரு ஆசாரியனாவதற்கு தகுதியுள்ள ஒவ்வொரு மனிதனும், அவன் ஒரு ஆசாரியனாக நியமிக்கப்பட்டபோது, மூல மன்னாவை ஒரு வாய் நிறைய பெற்றுக்கொள்ள அவனுக்குப் பரிபூரண உரிமை இருந்தது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதன் தான் ஆசாரியத் துவத்திற்குள் வருவதை அறிந்தபோது! என்ன ஒரு சிலாக்கியம் கிடைக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்தனர். அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு-ஒரு வாய் நிறைய இயற்கைக்கு மேம்பட்ட சுடப்பட்ட, வானத்திலிருந்து தேவனிடத்திலிருந்து வந்த இயற்கைக்கு மேம்பட்ட கிளறப்பட்ட, இயற்கைக்கு மேம்பட்ட ஆகாரம், இயற்கைக்கு மேம்பட்ட முறையில் காக்கப்பட்டது. 63 முழு ஊழியமும் இயற்கைக்கு மேம்பட்டதாய் உள்ளது. எப்படி ஜனங்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு, இயற்கைக்கு மேம்பட்டதை மறுதலிக்க முடியும்? அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பாருங்கள். ஆனால், ஒரு இயற்கைக்கு மேம்பட்டது! அவன் ஒரு ஆசாரியனானவுடனே, அவன் இயற்கைக்கு மேம்பட்டதை உட்கொண்டான். 64. இப்பொழுது என்ன ஒரு அழகான மாதிரி, அதாவது ஒவ்வொரு நபரும்..அந்நாட்களில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வம்சத்தில், ஒரு லேவியரில் பிறக்க வேண்டியதாயிருந்தது, அவர்கள் ஒரு ஆசாரியனாவதற்கு முன்பு, ஆனால் இப்பொழுது "விருப்பமுள்ளவன் வரட்டும்" என்பதாகும். பார்த்தீர்களா? அவர்கள் வந்தவுடனே, அவர்கள்...அது ஒரு பிறப்பாகக் கருதப்படுகிறது. "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்." தேவனுடைய ஆவியினால், மீண்டும் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது ஒரு ஸ்திரீக்கும், (இந்த நாளின்) மன்னாவுக்கான உரிமையுண்டு. இந்த மன்னா பரிசுத்த ஆவியாகும். 65 பேதுரு...அவர்கள் மிகுந்த குழப்பத்திலிருந்து வெளியே வந்தபோது, கோழைத்தனம் அவர்களிடமிருந்து நீங்கியதும், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார், பெந்தேகோஸ்தே நாளிலே பரிசுத்த ஆவி இறங்கியது, அவர்கள் தெருக்களில் சென்று கூச்சலிட்டு, பைத்தியம் பிடித்த ஜனங்களைப் போல் நடந்து கொண்டார்கள், ஏனென்றால் ஜனங்கள் எல்லோரும் அவர்கள் குடித்திருந்ததாக எண்ணியிருந்தனர். "அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நான் வியப்புறுகிறேன் என்று கேட்கின்றனர்?" ஒவ்வொரு...அப்போது, மத உலகம் கூட அந்த மக்கள் குடிபோதையில் இருப்பதாக நினைத்தது. 66 கவனியுங்கள், என்னுடைய கத்தோலிக்க நண்பரே, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும் அவர்களோடு இருந்தாள். அவள் அங்குச் சென்று, ஒரு குடிகாரப் பெண்மணியைப் போல் அவளை நடிக்க வைத்த ஏதோ ஒன்றை ருசிபார்க்கும் வரையில் அவளால் பரலோகத்திற்குச் செல்ல முடியவில்லையென்றால், அதைக் காட்டிலும் குறைவான ஒன்றை நீங்கள் வைத்து எப்படி அங்கு அடையப் போகிறீர்கள்? ஆனால் அவள் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்டாள். "நூற்றிருபது பேர் மகதலேனா மரியாளோடும் அந்த ஸ்திரீகளோடும்," குடித்து வெறித்த ஜனங்களைப் போல் நடந்து கொண்டு, தெருவில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். 67 அந்த நாளின் அதிநவீன சபையானது, (நீங்கள் அந்த சொற்றொடர்க்காக மன்னித்தால்.) உண்மையாகவே, "அவர்களை நோக்கிப் பாருங்கள்! அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் யாவரும் புது திராட்சரசத்தினால் நிறைந்துள்ளனர்" என்றனர். 68 அது அப்படித்தான் இருந்தது. இப்பொழுது கவனியுங்கள், பேதுரு கூறினான் (அப்பொழுது அவர்கள் கூறத் துவங்கினர்...), அவன், "எருசலேமின் ஜனங்களே, யூதேயாவில் வாசமாயிருக்கிறவர்களே, நீங்கள் அறிந்திருக்கக்கடவது, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். இவர்கள் வெறி கொண்டவர்கள் அல்ல." இப்பொழுது, நான் இங்கே எபேசு சபையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? சரி, முதலாம் சபையின் காலம். அவன், "நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்கள் அல்ல. இது மூன்றாம் மணி நேரம்; மது அருந்தும் கடைகளும் கூடத் திறக்கப்படவில்லை. எப்படி...? நல்லது, இது நாளின் மூன்றாம் மணி வேளையாயிருக்கிறது" என்றான். அவன், "தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது. அது உங்களுடைய சொந்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் காரியம் சம்பவிக்கும் என்று உங்களுடைய சொந்த வேதாகமத்தில் இது எழுதப்பட்டுள்ளது. ஏன்," என்று கூறி, அவன், "போதகராகிய நீங்கள் இதை அறிந்திருக்க வேண்டும்" என்றான். 69 சரி, அது அப்படியே இருக்க முடியுமா-அந்த செயல்பாட்டின் கீழ், சபையானது கொண்டுவரப்பட்டது கடைசி நாட்களில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அதே செயல்பாடு, உங்களால் சுட்டிக் காட்டி, "இதுதான் பேசப்பட்டது" என்று கூற முடியாதா? பார்த்தீர்களா? அங்குதான் காரியம். அதைக் குறித்து வெளி உலகத்திற்கு ஒன்றுமே தெரியாது; அது-அது அவர்களுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது. இப்பொழுது அவர்கள் கூறினார்கள்... 70 அவன், "இங்கே பாருங்கள்" என்றான். அவர்கள் இதைக் கேட்டபோது, "இப்பொழுது..." என்றனர். அவர்கள் எப்படி இயேசுவை சிலுவையில் அறைந்திருந்தனர் என்பதை அவன் அவர்களிடம் கூறினான். ஒவ்வொரு முறையும்... 71 இயேசுவை சிலுவையில் அறைந்ததற்காக நீங்கள் மன்னிப்பு பெறலாம். அவருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் மன்னிப்பு பெறலாம். "ஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுகிறவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது." நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், எனவே கவனமாயிருங்கள். தாழ்மையாய் நடக்க வேண்டும். ஒரு நொறுங்குண்ட, நொறுங்குண்ட ஆவியைக் கொண்டிருங்கள்; ஒரு தாழ்மையான இருதயம், பரிசுத்த ஆவியானவர் உங்களை வழி நடத்த மனப்பூர்வமாய் இருக்க வேண்டும். ஆமென். சரி. ஓ, என்னே! 72 இதோ அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் அங்கே மேலே இருக்கிறார்கள், ஜனங்கள் இந்தவிதமாக செயல்படுகிறார்கள்...அவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு கோழைகளாக இருந்தனர்; மேல் அறையில் அடைத்துக் கொண்டனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்து, அவர்கள் இருதயங்களை நிரப்பினபோது வெளியே வீதிகளில் அவர்கள் சென்றனர்! அவர்கள்....அவர்கள் தவறான காரியங்களைச் செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அங்கே அப்படிப்பட்ட ஒரு வெளிப்படுத்துதலில், அவர்கள் அங்கே வெளியே களிகூர்ந்து கொண்டும், தேவனைத் துதித்துக் கொண்டுமிருந்தனர். அவர்கள் இப்போது வெளியே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை, அவர்கள் மெதோடிஸ்டு களாயிருந்தாலும் அல்லது பாப்டிஸ்டுகளாயிருந்தாலும் சரி, அல்லது அவர்கள் பரிசேயர்களாயிருந்தாலும் அல்லது சதுசேயர்களாயிருந்தாலும் சரி. அவர்கள் தங்களுடைய ஆத்துமாவில் பரலோகத்தை ருசிப்பார்த்திருந்தபடியால் அங்கே களிகூர்ந்து கொண்டிருந்தனர். தேவன் அவர்களுக்கு ஆவிக்குரிய மன்னாவை அளித்திருந்தார். 73 இப்பொழுது, தேவன் மன்னாவை இயற்கையில் ஊற்றினபோது, அவர்கள் பயணத்தில் இருந்த வரையிலும் அது நீடித்தது; ஒரு அழகான மாதிரி. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த நாளிலே மன்னாவும் நின்று போனது. பெந்தெகொஸ்தே நாளிலும், அதே காரியம்... 74 மோசேக்கு, பெந்தெகொஸ்தேயைப் பாருங்கள். அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் சத்துரு மரித்திருந்ததைக் கண்டனர். மிரியாம் ஒரு தம்புருவை எடுத்து, அதை அடித்து, கூச்சலிட்டு, நடனமாடி, கரைக்கு ஓடினாள். ஸ்திரீகளும் அவளைப் பின்தொடர்ந்து, அதேக் காரியத்தைச் செய்தனர். மோசே தன்னுடைய கரங்களை உயர்த்தி, ஆவியில் பாடினான். 75 பெந்தெகொஸ்தே நாளில், பெண்கள் வெளியே வருகிறார்கள், தள்ளாடி, குதித்து, நடனமாடி, தொடர்ந்து ஆடுகிறார்கள். பேதுரு அவர்கள் மத்தியில் எழும்பி நின்று, "யூதேயா ஜனங்களே, எருசலேமில் வாசமாயிருக்கிற ஜனங்களே, இதை நீங்கள் அறிந்திருக்கட்டும், என் வார்த்தைகளைக் கேளுங்கள். பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறபடியால், நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல. இது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டு, 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொல்லுகிறார்: உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்: என் ஊழியக்காரிகள் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்: நான் மேலே வானங்களிலும், கீழே பூமியிலும் அதிசயங்களையும்; அக்கினி ஸ்தம்பங்களும், நீராவியும், புகையும் காண்பிப்பேன்: கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே அது நிறைவேறும். கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்." என்று கூறி தொடர்ந்து பிரசங்கித்தான். 76 அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் செவி கொடுத்தனர். மேலும், "அந்த நபரைப் பார்! இந்தக் கல்வியை அவன் எங்கிருந்து கற்றான்?" என்று கேட்டனர். அவர்களில் சிலர், "அவனால் தன்னுடைய சொந்த பெயரைக் கூட எழுத முடியாது" என்றனர். அவன் படிப்பறியாதவனும், பேதமையுள்ளவனுமாயிருந்தான் என்று வேதம் கூறியுள்ளது. "அவன் எந்தப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறான்? ஒன்றுமில்லை. சரி, இது எப்படி சம்பவித்தது? இது எப்படி சம்பவித்தது?" அவர்கள் செவிகொடுத்து, "நல்லது, அந்த மனிதன் உண்மையாகவே வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறான். நாங்கள் இதற்கு முன்பு அந்தவிதமாக அதைக் கேள்விப்பட்டதேயில்லை" என்றனர். பார்த்தீர்களா? 77 அவன், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், "இந்த மன்னாவின் ஆசீர்வாதமானது இங்கே விழுந்துள்ளது, அது முன்காலத்திலிருந்த மன்னாவைப் போல, இந்தச் சந்ததிக்கு, அடுத்த தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்கு, இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்கும், உலகின் மூலை முடுக்கிலும் உள்ள இடங்களுக்கும் அனுப்புகிறேன்" என்பதாகும். 78 அப்பொழுது விழுந்த அதே பரிசுத்த ஆவி, இப்பொழுதும் விழுகிறது; அதே முடிவுகள், அதே காரியம், அதே ஜனங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பரிபூரணமாக! 79 கவனியுங்கள், "நான் அவனுக்குக் கொடுப்பேன்; ஜெயங் கொள்ளுகிறவனுக்கு நான் ஜீவ அப்பத்தைக் கொடுப்பேன்." அவர் அதைச் சபைகளில் ஒன்றில் கூறினார். "அவன் இனி தாகமடையான், இனி அவன் பசியாயிருப்பதில்லை. அவன் இனி ஒருபோதும் தாகமடையமாட்டான்" என்றார். ஒரு மனிதன் எப்போதாவது ஒருமுறையாவது (இங்கே அது உள்ளது; நீங்கள் கவனமாக உற்று நோக்குங்கள்.), ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ உண்மையாகவே ஒருமுறை பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டால், அப்பொழுது நீங்கள் அவனை ஒருபோதும் அசைக்கவே முடியாது. அவன் எங்கே இருக்கிறான் என்பதை அவன் அறிவான். நீங்கள் கொள்கைகள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தோடும் வரலாம். அவன் நேராக அவைகளினூடாக நடந்து செல்வான். "அவன் இனி ஒருபோதும் தாகமடையமாட்டான்." தம்மை சிருஷ்டித்தவர் யார் என்பதை அவன் அறிந்திருக்கிறான்; ஒருபோதும் குழப்பமடைய மாட்டான். அவனைத் தொல்லைப் படுத்தாது; அவன் தொடர்ந்து செல்கிறான். 80 "ஜீவ அப்பத்தை அவனுக்குக் கொடுப்பேன், அவன் இனி ஒருபோதும் பசியாயிருப்பதில்லை, இனி அவன் தாகமடைய மாட்டான்." பார்த்தீர்களா? "தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற விருட்சத்தின் கனியைப் புசிப்பான், பார்த்தீர்களா, அந்த விருட்சத்திலிருந்து புசிப்பான்." அந்த விருட்சம் கிறிஸ்து இயேசுவாயிருந்தது. பார்த்தீர்களா? கிறிஸ்து இயேசு மரித்து, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்பி வந்தார், எனவே அவர் இங்கே இருக்கிறார், சபையில் புசிக்கப்பட்ட மன்னா. கவனியுங்கள், இதோ, அது, 6-வது வசனம். அவர் நம்மை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின... 81 "ஆவிக்குரிய ஆசாரியத்துவம்; ராஜரீக சந்ததி; ஆவிக்குரிய பலி." இப்பொழுது அது என்ன? "ஆவிக்குரிய பலிகள்" என்று வேதவாக்கியத்தை மேற்கோள் காட்டி, "அதாவது, அவருடைய நாமத்திற்கு துதி செலுத்துகிற நம்முடைய உதடுகளின் கனிகள்." இப்பொழுது, என்ன மாதிரியான ஒரு விஷயம்?" "ஒரு ஆவிக்குரிய பலி." 82 இப்பொழுது, நாம் இங்கே சரியாகத் துவங்கலாம்; கவனியுங்கள், ஒரு நல்ல இடத்திலிருந்து துவங்கலாம். 83 சபையில் ஒரு சிறு குழப்பம் உண்டாகும்போது, நீங்கள் ஒரு பக்கமாக ஓடி, இப்பொழுது குமுற வேண்டாம். நீங்கள் அப்படி இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு ஆசாரியனல்ல. பாருங்கள், நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். "நம்முடைய உதடுகளின் கனிகள் அவருடைய நாமத்திற்கு துதி செலுத்துகிற ஆவிக்குரிய பலி." நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 84 "சரி," நீங்களோ, "எனக்குச் சபைக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை" என்று கூறலாம். ஆனால் நீங்கள் ஒரு ஆசாரியன். அது உங்களுடைய கடமையாகும். நீங்கள் அங்கு இருக்க வேண்டும். 85 "நல்லது, ஆராதனையில் பங்கு கொள்ள எனக்கு விருப்பமில்லை." நீங்கள் ஒரு ஆசாரியனாயிருக்கிறீர்கள், "ஒரு பலியை, ஒரு ஆவிக்குரிய பலியைச் செலுத்துகிறீர்கள்." இன்றைக்கு அவர்கள் அழைக்கிறபடி, யாருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல்; அவை யாவும் நல்லது தான், எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. சபைக்கு வரும்படி யாரோ ஒருவரை அழைக்கப் போவதில்லை; அதெல்லாம் நல்லதுதான், நான் அதற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால், அது நீங்கள், "உங்களுடைய உதடுகளின் கனிகளாகிய அவருடைய நாமத்தைத் துதிக்கும்" நீங்கள் ஆவிக்குரிய பலியைச் செலுத்துகிறீர்கள். 86 ஒவ்வொருவரும் தூஷித்து, இந்தக் காரியங்களைக் கூறி, தவறான காரியங்களைச் செய்யும் ஒரு நேரம் வருவதை நீங்கள் காணும்போது, நீங்கள் சென்று விடுகிறீர்களா? நீங்கள் அங்கே ஒரு ஆவிக்குரிய பலியுடன் நின்று, "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களையும் நீக்கிச் சுத்திகரிக்கிறது, கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்குகிறது" என்று கூற வேண்டும். "நீ பைத்தியமான, நபரே!" 87 "நீங்கள் கூறுகிறபடியே. அது சரிதான். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில், 'அது இரட்சிப்புக்கேதுவான தேவனுடைய வல்லமை யாயிருக்கிறது.' நான் அதை விசுவாசிக்கிறேன்." பார்த்தீர்களா? 88 இப்பொழுது, அவர்கள், "நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்கின்றனர். ஊ, எனக்குத் தெரியாது, நீங்கள் எங்களுடைய போதகரைக் கேட்டுப் பார்ப்பது நல்லது" என்று கூறுகிறீர்கள். 89 அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இப்பொழுது ஆசாரியன். நீங்கள்தான் அந்த நபர். "ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறுகிறது" என்று சொல்லுங்கள். "நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்கிறீர்களா?" "ஆம், ஐயா." "உங்களுக்கு எப்படித் தெரியும்?" "நான் அதைப் பெற்றுக்கொண்டேன்." நிச்சயமாக. ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதமே! அப்போஸ்தலர்கள் மேல் விழுந்த பரிசுத்த ஆவி, இப்பொழுதும் அதே பரிசுத்த ஆவி விழுகிறது. 90 நீங்களோ, "அது அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே" என்று கூறலாம். அது இருந்ததா இல்லையா என்று நாம் அதை இன்னும் சிறிது நேரத்தில் பார்த்துத் தீர்த்து வைப்போம். 91 சரி, "ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவம், ஆவிக்குரிய பலிகளை செலுத்துதல்." இப்பொழுது, இப்பொழுது 8-ம் வசனம் அல்லது 7-ம் வசனம். இதோ, மேகங்களுடனே வருகிறார்;......... 92 இப்பொழுது, நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தட்டும். தாயார் கூறியது போல, "மேகங்கள்" என்பது ஒரு பெரிய இடி முழக்கத்தின் மேல் அவர் வருகிறார் என்று அர்த்தமல்ல, அவளுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, அவள் இங்கே எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். 93 நான் ஒரு சிறு பையனாயிருந்தபோது, அவள் உட்கார்ந்து என்னிடம், "அவர் வருகிறார். என்றோ ஒரு நாள் மகத்தான பெரிய மேகம் எழும்பப் போகிறது, தேவன் வரப்போகிறார்" என்றாள். 94 மேலும், இப்பொழுது, அவர் வருகிற மேகம் (இவை எல்லாவற்றையும் திரும்பப் பெற்று, முழு காரியத்தின் உண்மையான பின்னணியையும் அறிந்து கொள்ள நமக்கு நேரம் இருக்குமானால் நலமாயிருக்கும்.), இப்பொழுது, அவர் வருகிற மேகம், இடி முழக்கம் போன்ற மேகம் அல்ல, ஆனால், அது "மகிமையின் மேகமாக" இருக்கிறது, அவர் உள்ளே வருகிறார். புரிகிறதா? பார்த்தீர்களா? 95 இப்பொழுது, இயேசு மறுரூப மலையில் தேவனால் நிழலிடப்பட்டபோது, "மேகங்கள் அவரையும் அவருடைய வஸ்திரத்தையும் நிழலிட்டன." பார்த்தீர்களா? 96 எலியா இறங்கி வந்தபோது, ஒரு மேகம் இறங்கி வந்து அவனை ஏற்றுக்கொண்டது. ஒரு-ஒரு அக்கினி ஸ்தம்பமல்ல, இல்லை...நான் கூறுவது, ஒரு இடி முழக்கம் அல்ல, ஆனால், "மகிமையின் மேகம்." 97 அவருடைய மகத்தான, மகிமையான பிரசன்னம் பூமியை தாக்கும். "அவர் மேகங்கள்மேல் வருகிறார்." ஓ, நான் அதை விரும்புகிறேன். "மேகங்கள்" அலை அலையாய், அவருடைய மகிமை பூமி முழுவதும் வந்து, பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதல் வரும். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களில் ஜீவித்தபோது, அவர்கள் மரித்து, அவர்களுடைய பிணம் அங்கே கிடத்தப்பட்டபோது, அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் கறை படிந்திருப்பதையும், அதைப் போன்ற காரியங்களையும், அவர்கள் இங்கே ஒரு கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர், அதே ஆவியின் ஒரு மகத்தான அலை, "வூஷ்" என்ற ஒரு அலை அலையாய். 98 "பிந்தினவனாயிருந்தவன் முந்தினவன் ஆவான். முந்தினவன் பிந்தினவன் ஆவான்." அது எப்படி அந்த விதமாக இருக்க முடியும்? அதுவே உயிர்த்தெழுதலின் ஒழுங்குமுறையாயுள்ளது. எனக்கு முந்தின தலைமுறையிலாவது, எனக்கு அடுத்த தலைமுறையிலாவது நான் யாரையும் அறியமாட்டேன். இந்தத் தலைமுறையில் உள்ளவர்களை நான் அறிவேன். ஒவ்வொரு சந்ததியும் வெற்றிகரமாக, அது சென்றவிதமாகவே வரும். "பிந்தினவர்கள் முந்தினவர்களாக இருப்பார்கள்." நிச்சயமாக, அது இருக்க வேண்டும். பார்த்தீர்களா? நான் என்னுடைய ஜனங்களை அறிந்து கொள்வேன். அடுத்த நபர், என்னுடைய தந்தை, தன்னுடைய ஜனங்களை அறிந்துகொள்வார்; அவருடைய பாட்டனார், அவருடைய ஜனங்கள்; அந்தவிதமாகத் தெரிந்து கொள்வார்கள். 99 அலை அலையாக, அலை அலையாக, அலை அலையாக, எல்லா இடங்களிலிருந்தும் பரிசுத்தவான்கள் எழும்புவார்கள். அது அற்புதமாயிருக்குமல்லவா? ஆமென். அது வயோதிக ஜனங்களை மீண்டும் இளமையாக உணரச் செய்கிறது. ஆம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். சரி. ...மேகங்கள்மேல் வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், (அவர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்பு மரித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர்கள் இன்னமும் அவரைக் காண்பார்கள்.) அவரைக் குத்தினவர்களும் கூட: பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 100 யோவான், "ஆமென்" என்று சத்தமிட வேண்டியதாயிருந்தது. அதாவது, "அப்படியே ஆகட்டும். அது அவ்விதமாகவே இருக்கட்டும்." நான் அல்பாவும் ஓமெகாவும்... 101 இப்பொழுது, அல்பா என்பது கிரேக்க எழுத்துக்களில் "A" என்ற எழுத்தாகும். ஒமேகா என்பது கிரேக்க எழுத்துக்களில் "Z" என்ற எழுத்தாகும். இப்பொழுது, வேறு வார்த்தைகளில் கூறினால், அது இன்றைக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், "நான் A முதல் Z வரை என்பதாகும்." இப்பொழுது, அங்கே வேறு யார் இருக்கிறார்? "நானே முந்தினவர்; நானே பிந்தினவருமாயிருக்கிறேன். நான் A முதல் Z வரை உள்ளேன்." 102 இப்பொழுதே கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையின் பேரில் பேச நமக்கு நேரம் இருந்தால் நலமாயிருக்கும், அது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும், தெய்வீகத்தன்மை. 103 ஆகையால் அநேக ஜனங்கள் அவரை ஒரு போதகராக, ஒரு தத்துவஞானியாக, அல்லது வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாக ஆக்க முயற்சிக்கும்போது, அவர் தேவனாயிருந்தார். அவர் ஒன்று தேவனாய் அல்லது உலகம் எப்போதும் பெற்றிருந்த மிகப்பெரிய வஞ்சகனாயிருக்க வேண்டும். அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், அவருடைய இரத்தம் ஒரு மனிதனாயிருந்தது. அவர் ஒரு-ஒரு ஆசிரியராக, ஒரு கல்வியறிவாளராக இருந்திருந்தால், அவருடைய இரத்தம் ஒரு மனிதனாயிருந்தது. 104 அவர் தேவனாயிருந்தார், அவருடைய இரத்தம் தெய்வீகமாய் இருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவன் கன்னி மரியாளின் மேல் நிழலிட்டு குமாரன், கிறிஸ்து இயேசுவைப் பிறப்பித்த இரத்த அணுவை அவளுடைய கர்ப்பத்தில் சிருஷ்டித்தார். தேவன் இறங்கி, அந்தச் சரீரத்தில் ஜீவித்தார், தேவன் (இம்மானுவேல்) பாவங்களை எடுத்துப்போட; நமக்கு மத்தியில் மாம்சமானார். 105 தேவன் தம்முடைய முதல் மனிதனை சிருஷ்டித்தபோது, அவர் ஆதியாகமம் 1:26-ல் ஒரு ஆவி மனிதனாயிருந்த தம்முடைய சொந்த சாயலில் அவனை உண்டாக்கினார். சரி. அவர் ஆணும் பெண்ணுமாக மனிதனை உண்டாக்கினப் பிறகு, நிலத்தைப் பண்படுத்த மனிதனே இல்லாதிருந்தது. நாம் சற்று நேரம் கழித்து, "ஏழு நட்சத்திரங்கள்" என்பதன் பேரில் அதைப் பார்ப்போம். ஆனால் அப்படியே... ஆனால் அவர் ஆதியிலே அவனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார், அது உண்மை, "அவருடைய சொந்த சாயலில்." தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார். 106 அதன்பின்னர், ஆதியாகமம் 2, நிலத்தைப் பண்படுத்த ஒரு மனிதனும் இல்லாதிருந்தபடியால், தேவன் அவனை மாம்சத்தில் வைத்தார்; தம்முடைய சாயலில் அல்ல, பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உண்டாக்கினார் (அது உண்மை.), அவனுக்கு ஒரு குரங்கைப் போன்ற ஒரு கரத்தையும், ஒரு கரடியைப் போன்ற ஒரு பாதத்தையும் அல்லது வேறு ஏதோ ஒன்றையும் அவனுக்குக் கொடுத்தார்; எனக்குத் தெரியாது, ஆனால் அவருடைய பூமிக்குரிய வீட்டில் தொடர்பு கொள்ள அவர் அவனுக்கு ஐம்புலன்களைக் கொடுத்தார். பின்னர் அந்த மனிதன் பாவம் செய்தான். 107 தேவன் இறங்கி வந்து, மனிதனின் பாவத்தைப் போக்க, மனிதனாக்கப்பட்டார் (ஆமென்.), மீட்பதற்காக. நான் அல்பாவும் ஓமெகாவும்... 108 நான் இங்கே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் அவரை நோக்கிப் பார்த்தேன். யோவான் இந்தச் சத்தத்தை மறுபடியும் காண திரும்பியபோது, அவனிடம் பேசிக்கொண்டிருந்தது என்னவெனில், "அவர் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தார், அவருடைய சிரசின் மேல் ஒரு வானவில் இருந்தது." வானவில்லுக்கு ஏழு பரிபூரண நிறங்கள் உள்ளன, இந்த ஏழு பரிபூரண நிறங்களும் ஏழு சபைக் காலங்களைக் குறிக்கின்றன. அது மீண்டும் உண்மை. அது என்னவாயிருந்தது? இதோ அது உள்ளது. சகோதரனே, இது புதியதாய் உள்ளது. பாருங்கள், ஏழு பரிபூரண நிறங்கள், ஏழு, ஒரு வானவில் ஒரு உடன்படிக்கையை சுட்டிக்காட்டுகின்றன. 109 தேவன் நோவாவிற்கு முதலில் வானவில்லைக் கொடுத்தார். தேவன் இதற்கு முன்பு வாக்குத்தத்தம் செய்தபடி, மழை பெய்யும்போது, அவர் வில்லைக் காண்கிறார். அவர், "நான் அதை இனி ஒருபோதும் தண்ணீரினால் அழிக்கமாட்டேன்" என்றார். 110 அப்பொழுது அவன் இயேசுவை நோக்கிப் பார்த்தான், அவருக்கு மேலே ஏழு வானவில் நிறங்கள் இருந்தன; அவர் இதில் இருந்தார், அது தேவனுடைய உடன்படிக்கையாயிருந்தது. அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நின்றுகொண்டிருந்தார். "அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்." வச்சிரக்கல் ரூபன், பதுமராகம் பென்யமீன்; அதுவே முந்தினவரும் பிந்தின பிதாக்களுமாயிருந்தது. அதாவது "ஆல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும்" மற்றும் ஏழு வானவில் நிறங்கள், ஏழு சபைக் காலங்கள், ஏழு பொன் குத்துவிளக்குகளில், ஏழு நட்சத்திரங்களோடு, அவரோடு உடன்படிக்கை. ஓ, கர்த்தருக்குச் சித்தமானால், நாம் சிறிது நேரம் கழித்து அதைக் காண்போமேயானால், என்ன ஒரு காட்சி. சரி. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 111 ஓஓ! அவர் யார்? இது எதைக் குறித்த வெளிப்பாடு? இயேசு கிறிஸ்து. இங்கே அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல. இங்கே, அவர் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார், தேவன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்; அல்பா, ஓமெகா. "நான் A முதல் Z வரை உள்ளவர். இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர் நானே. நானே சர்வ வல்லமையுள்ளவர்" என்றார். இது மிகவும் தெளிவாக உள்ளது, இல்லையா? அங்கே சர்ச்சைக்கு வாய்ப்பே இல்லை. "இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்." 112 இப்பொழுது யோவான் பேசுகிறான். கவனியுங்கள். உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும்,...பத்மு என்னும் தீவிலே இருந்தேன்... 113 தேவனுடைய வார்த்தைக்காக, அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு மனிதன் வைக்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆம். தேவனுடைய வார்த்தையினிமித்தமும்...இயேசு கிறிஸ்துவின் சாட்சியினிமித்தமும். 114 அவன் மதசம்பந்தமான ஜனங்களுக்கு வார்த்தையைப் பிரசங்கித்ததற்காக நாடு கடத்தப்பட்டான். அதைத்தான் வார்த்தை கூறுகிறது. இல்லையா? அவன் அங்கே பிரசங்கம் செய்வதற்காக இருந்தான்; நாடு கடத்தப்பட்டு, சபையிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், உலகத்தின் எல்லாவற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டான். ஆமென். ஆனால் அவனை நேசித்து, அவருடைய சொந்த இரத்தத்தில் அவனைக் கழுவின அவரிடத்திலிருந்து அவன் வெளியே தள்ளப்படவில்லை. அவன் அவருடைய சமூகத்தில் பத்மு என்னும் தீவில், "தேவனுடைய வார்த்தையின் நிமித்தமாக" இருந்தான். 115 இன்றைக்கு எத்தனை பிரசங்கிமார்கள் செல்வார்கள் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்? அவர்கள் ஏதோ ஒரு சிறு காரியத்தை சிறிய ஏதோ ஒரு காரியத்தைச் செய்யச் சென்று, அது நிலைகுலைய, நாம் அதைக் குறித்து மிகவும் குழப்பமடைகிறோம். இங்கே இந்த மனிதன் இருபத்தி நான்கு மணி நேரமாக எண்ணெயில் வேகவைக்கப்பட்டு, மேலும் பத்மு தீவில் வீசியெறியப்பட்டான், இன்னமும் கர்த்தர் அவனோடு இருந்தார். 116 "இயேசு என்னோடு செல்வாரானால், நான் எங்கும் செல்வேன்" என்று அவர்கள் வழக்கமாகப் பாடும் அந்தப் பழைய பாடலை நான் விரும்புகிறேன். நாம் அதைப் பாடுகிறோம், ஆனால் நாம் அதை உண்மையாகவே பொருட்படுத்திக் கூறுகிறோமா என்று நான் யோசிக்கிறேன். என்னுடைய நேர்மையான கருத்துப்படி, அதை நிரூபிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு நீண்ட காலம் செல்லாது, எனவே நீங்கள் உண்மையாகவே உறுதியாக இருப்பது நல்லது. சரிபார்த்து, பட்டியலை எடுத்து, எல்லாமே சரியாக உள்ளதா என்று பாருங்கள். 117 இப்பொழுது, எப்படி, இப்பொழுது இங்கே துவங்க வேண்டும். யோவான் பதிலளிக்கையில், அவன் "தேவனுடைய வார்த்தைக்காகவும் சாட்சிக்காகவும் பத்மு தீவில் இருந்தான்" என்று அவன் கூறினான். நான் ஆவிக்குள்ளானேன்... (நான் அதை விரும்புகிறேன்.) கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்... 118 இப்பொழுது, மற்றொரு நாளைக் குறித்து பேசுகையில், என்னுடைய ஏழாம் நாள் ஆசிரிப்புக்கார நண்பர்களுக்கு, நாம் நிச்சயமாக அதைக் குறித்து சிறிது நேரம் கழித்து பேசுவோம். சரி. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 119 நாம் இப்பொழுது இந்த அடையாளங்களை விட்டுவிடாதிருப்போமாக. நாம் இப்பொழுது அடிதளமிட்டுக்கொண்டிருக்கிறோம், அதனால் நான் இங்கு வரும்போது, நாம் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வோம். நாம் எதைக் குறித்து பேசப் போகிறோம் என்று பாருங்கள், "அது யார்? இந்த நபர் யார்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு என்ன? எப்படியாயினும் அவர் யார்? அது எப்படி வந்தது? அது எனக்கு என்ன பொருட்படுத்துகிறது?" அது உங்களுக்கு எதையாவது பொருட்படுத்துகிறதா என்று பாருங்கள், பாருங்கள். "அங்கே எனக்கு என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள்." கவனியுங்கள். நான் ஆவிக்குள்ளானேன்... 120 நீங்கள் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும், நீங்கள் எவ்வளவு தேவபக்தியுள்ளவராயிருந்தாலும், எவ்வளவுதான் ஒரு ஊழியக்காரராக அல்லது சபை அங்கத்தினராக இருந்தாலும், நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் ஆவிக்குள்ளாகும் வரையில் நீங்கள் ஒருபோதும் தேவனோடு எங்கும் செல்ல முடியாது. அது உண்மை. உணர்ச்சிவசப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆவிக்குள்ளாக வேண்டும் என்று நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? பாருங்கள், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு, எந்தக் காரியத்தையும் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆவிக்குள்ளாகும்போது, நீங்கள் காரியங்களைக் காண்கிறீர்கள். அது உண்மை. 121 பண்டைய தீர்க்கதரிசியாகிய எலியாவை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அங்கே அந்த நாளில் எப்போது-எப்போது ஒரு...ஆகாபின் குமாரன், அவர்கள், சில அவிசுவாசிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டபோது, யோசபாத் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவர்கள் வனாந்தரத்தில் ஏழு நாட்கள் சென்றனர், அதே சமயத்தில் எந்தத் திசைகாட்டி கருவியையும் எடுத்துச் செல்லவில்லை. அவர்களை ஏழு நாட்கள் மாத்திரமே பராமரிக்க போதுமானதாயிருந்தது; கர்த்தரிடத்தில் கலந்தாலோசிக்கவில்லை; அப்படியே வெளியே சென்று விட்டனர். 122 அது ஜனங்களைப் போன்றதல்லவா? "ஓ, நான் உங்களுக்குச் சொல்லுவேன், அது ஒரு மேலான வேலை. நான் இந்த சபையை விட்டு வெளியேறி, அந்த ஒன்றிற்கு செல்லப் போகிறேன்." இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் கலந்தாலோசித்து, அது என்னவென்று கண்டறிவது நல்லது. 123 அங்குச் சென்றபோது, அவர்கள் தொல்லைக்குள்ளானதைக் கண்டறிந்தனர். தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமும் அதுதான், நீங்கள் கர்த்தரிடம் கலந்தாலோசிக்காத பல காரியங்களைச் செய்து சுற்றித் திரிவதால், உங்களுடைய நிரப்பீடு துண்டிக்கப்படுகிறது. நீங்கள் வழக்கமாகப் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை நீங்கள் ஏன் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தேவனுடைய வல்லமை உங்கள் மத்தியில் கிரியை செய்யவில்லையென்றும் நீங்கள் யோசிக்கிறீர்கள், விநியோக பாதை ஒரு வேளை துண்டிக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியும், நீங்கள் வெளியே செல்லும்போது, தண்ணீர்... 124 நான் சில சமயங்களில் அரிசோனாவிலுள்ள பாலைவனத்திற்குள் செல்வேன். அந்த பாலைவனத்தில் உள்ள ஒவ்வொரு சிறிய புதரும் தீங்கு விளைவிப்பதாக இருப்பதை நான் கவனிக்கிறேன்; அது உங்களைக் குத்திவிடும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை தள்ளும்போது, அது உங்களைக் குத்திவிடும். அதற்குப் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தற்பாதுகாப்பிற்காகக் முட்கள் நீண்டுள்ளன. 125 எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் மழை பெய்யும் ஒரேகானிலோ அல்லது நீங்கள் இங்கே திரும்பி வந்தால், அவைகள் ஒவ்வொன்றும் ஒரே விதமான புதர்களின் முட்களைப் பெற்றிருக்கவில்லை. பாருங்கள், தண்ணீர் அவைகளை மிருதுவாக வைத்திருக்கிறது. 126 சபையோடுள்ள காரியமும் அதுதான். நீங்கள் யாவும் காய்ந்துபோய், தடைசெய்யப்பட்டு, மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும், நீங்கள் மிகவும் குளிராகவும், சடங்காச்சாரமாகவும், அலட்சியமாகவும் இருந்து, நீங்கள் எந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வதில்லை, அப்பொழுது உங்களுடைய இருதயம் முழுவதும் சினத்தினாலும், கோபத்தினாலும் நிறைந்து, ஒவ்வொருவரும், "ஓ, நான் அவனைப் பழி வாங்குவேன். நான் அவளைப் பழி வாங்குவேன். நான் சபையை விட்டு வெளியேறுகிறேன்" என்கிறீர்கள். வெறும் ஒரு பாலைவனத்தில் வாழும் ஒரு கூட்ட குச்சிகள். அது உண்மை. உங்களுக்குத் தேவை என்னவெனில், உங்கள்மேல் பொழியப்பட்ட நல்ல பழங்காலத்து நாகரீகமான பரிசுத்த ஆவியான தண்ணீர், அந்தப் பழைய கடின இருதயத்தை மென்மைப்படுத்துவதேயாகும். ஆமென், 127 நான்-நான் கோமாளியாக முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. நான் இதை உங்களுக்கு எடுத்துரைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரனே, நீங்கள் மிருகத்தின் முத்திரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் எங்கே நிற்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் கண்டறியப் போகிறீர்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் முற்றிலும் உதவியற்றவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பீர்கள். அதற்குப் பாவமன்னிப்பு கிடையாது. நீங்கள் அதிலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது. அது உண்மை. ஏறக்குறைய உங்களுடைய கண்ணைச் சிமிட்டினால் நீங்கள் அதைச் செய்ய முடியும், பாருங்கள், எனவே ஜாக்கிரதையாயிருங்கள். இப்பொழுது இதோ. அவனுக்குக் கொடுப்பேன்...கவனியுங்கள், பாலைவனம்... 128 நான் அந்த-அந்தத் தண்ணீர்களை, எப்படி அந்தத் தண்ணீர்கள் அவைகளை மிருதுவாக வைத்திருக்கின்றன என்று கூறினேன். ஆவிக்குள்ளாக நாம் இன்றைக்கு அதைத்தான் செய்கிறோம். யோவான், "நான் ஆவிக்குள்ளானேன்" என்றான். 129 எலியா அங்கே வனாந்திரத்தில் இருந்தபோது, அவர்கள் வந்தனர். யோசபாத், "நாம் போய் தீர்க்கதரிசியினிடத்தில் ஆலோசனை கேட்போம்" என்றான். அவர்கள் தீர்க்கதரிசிக்கு முன்னால் சென்றனர். 130 பாருங்கள், இப்பொழுது, அவன் தன்னுடைய நியாயமான கோபத்தை எழுப்பினான். அவன் அந்த நபரை நோக்கிப் பார்த்து, அவன், "நீ ஏன் உன்னுடைய தாயின் தெய்வத்தண்டை செல்லக் கூடாது? நீ ஏன் உன்னுடைய சொந்த, பழைய, குளிர்ந்துபோன, சம்பிரதாயமான சபைக்குத் திரும்பிச் செல்லக் கூடாது? நீ தொல்லைக்குள்ளாகும்போது, நீ ஏன் என்னிடத்தில் வந்தாய்?" என்று கேட்டான். அது கூறுவதற்கு ஒரு நல்ல காரியமாயிருக்கவில்லை, ஆனால் அதைப் பொருட்படுத்திக் கூறுவதற்கு அது போதுமான வார்த்தையாகும். "நீ ஏன் என்னிடம் வந்தாய்? உன் தாயின் தெய்வத்தண்டை ஏன் போகக் கூடாது? நீங்கள் எல்லோருமே அந்தப் பெரிய அருமையான சபைகளையும், அருமையாகப் போஷிக்கப்பட்ட ஆசாரியர்களையும், மற்றும் பல அங்கே முன்பிருந்ததையும் உடையவர்களாயிருக்கிறீர்கள். திரும்பிச் சென்று, அதைக் குறித்து அவர்களிடம் கேளும். நீ ஏன் இங்கு வந்து என்னிடத்தில் வருகிறாய்?" என்றான். வ்யூ. என்னே. அவன் ஒருவிதமாக முழுவதுமாக நிரப்பிவிட்டான், நிச்சயமாகவே, அவர் அவ்வாறு செய்யவில்லையா? அவன், "அந்தத் தேவபக்தியுள்ள மனிதனாகிய யோசபாத்தின் பிரசன்னத்தை நான் மதிக்காதிருந்திருந்தால், நான் உன்னை நோக்கிப் பார்க்கக் கூடமாட்டேன்" என்றான். ஓ, என்னே, அந்தத் தீர்க்கதரிசி என்ன ஒரு நிலைமைக்குள்ளானான்! இப்பொழுது அவன் அந்தவிதமான நிலைமையில் இருக்கிறான். 131 அதற்கு அவன், "சரி, ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்" என்றான். சில ஜனங்கள் சபையில் இசையில் நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால் அவனோ, "எனக்கு ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்" என்றான். அந்த வாத்தியக்காரன் சில நல்ல பழைய பாடலை இசைக்கத் துவங்கினபோது, என் தேவனே, உம்மண்டை; நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்பினாலும் எனக்குத் தெரியாது. ஊழியக்காரன் ஜெபிக்கத் துவங்கினபோது, தேவனுடைய ஆவி தீர்க்கதரிசியின் மேல் இறங்கியது. ஆவியானவர் அவன்மேல் வந்தபோது, அவன் ஒரு தரிசனத்தில் பிரவேசித்தான்; அவன் காரியங்களைக் காணத் துவங்கினான். 132 நீங்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள், "ஜனங்கள் எப்படி 'ஆமென்' என்று கூற முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறலாம். ஒருமுறை ஆவிக்குள்ளாகுங்கள். அது உண்மை. 133 அவர்கள் எப்படி தயூளக்கட்டப் பந்து விளையாட்டில் நின்றுகொண்டு, ஒருவரையொருவர் முதுகில் அடித்துக்கொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, தொப்பிகளைக் கீழே இழுத்துக்கொண்டு, சத்தமிட்டுக் கொண்டும், வளைத்துக் கொண்டும் இருப்பார்கள். அது எனக்குப் பைத்தியம் பிடித்தது போன்று தென்படுகிறது. "பாருங்கள், நீங்கள் ஒரு நல்ல தயூளக்கட்டப் பந்து விளையாட்டு வீரர் அல்ல" என்று கூறலாம். நான் ஏறக்குறைய... 134 ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் உங்களைக் குறித்து என்ன? சரி. அது உண்மை. நீங்கள் ஆவிக்குள்ளாகப் பிரவேசிக்க வேண்டும். 135 வழக்கமாக நீங்கள் நடனங்களுக்குச் செல்லும்போதும் அந்த விதமாகத்தான் இருக்கும். நீங்கள் இப்பொழுது போகமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக முடியாது. ஆனால் நீங்கள் நீங்கள் முன்பு சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் ஆரவாரம் போன்ற இசையை இசைத்து, மேளங்களை அடித்து, முரசுகளைக் கொட்டி, அதைக் குறித்து அங்கே இருந்த ஒவ்வொரு விதமான காரியங்களையும் செய்து; ஸ்திரீகள் அரை நிர்வாணமாக மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்து அங்கு ஓடி, நடனத்தின் ஆவிக்குள்ளாகி, தரையில் நடனமாடி, போன்ற காரியங்கள். பாருங்கள், அது உண்மை, நீங்கள் அதனுடைய ஆவிக்குள் பிரவேசிக்கிறீர்கள். அது பிசாசின் ஆவி. (சபையோர், "ஆமென்" என்கின்றனர்) நீங்கள், "ஆமென்" என்று கூறினதற்காக மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அது உண்மை. நான் அதை வேதாகமத்தின் மூலம் நிரூபிப்பேன். அது உண்மை. சரி. 136 "சகோதரனே, நான் அதை நம்பவில்லை" என்று கூறலாம். சரி, நீங்கள், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், அல்லது நான் என்ன நினைக்கிறேன் என்பதெல்லாம் அதுவல்ல. 137 அதைத்தான் தேவனுடைய வார்த்தை கூறுகிறது. அதுதான் இதற்குத் தீர்வாகிறது. அதுவே முடிவான வார்த்தையாயுள்ளது. ஆம், ஐயா. அவர், "நீங்கள் உலகத்திலும், அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை" என்றார். அது உண்மை. வயோதிகப் பெண்மணி தன்னுடைய மகளுக்குத் தாள நடனம் ஆடக் கற்றுக் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா, அது போன்ற காரியங்கள், அங்கே போய் ராஜாவுக்கு முன்பாக நடனமாடி, யோவான் ஸ்நானகனின் தலையைக் கேட்டாள்; அவளுடைய எழுபது பிள்ளைகள் விபச்சாரிகளாயும், தூக்கு மேடையிலேயும் மரித்தனர். அந்தவிதமாக அது என்ன செய்கிறது என்பதை உங்களால் காண முடியும். 138 மோசேயின் தாய் வீட்டில் தங்கியிருந்து, அவனைப் பராமரித்தாள், கர்த்தருடைய வார்த்தையை அவனுக்குப் போதித்தாள், அவனுக்கும் அவனுடையவர்களுக்கும் என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் பாருங்கள். அவன் மூலமாய் வெளியே வந்து.. ஆபிரகாம், இன்னும் மற்றவர்களும், கீழே. 139 சரி, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, நீங்கள்-நீங்கள் ஒரு சுயாதீனமான ஒழுக்க முகவர். நீங்கள் செயல்பட விரும்புகிற எந்தக் காரியத்தின் பேரிலும் நீங்கள் செயல்படுகிறீர்கள். சரி. தேவன் ஏதேன் தோட்டம், ஜீவ விருட்சம் அல்லது மரண விருட்சம் போன்றவற்றை மனிதனுக்கு முன்பாக வைத்திருக்கிறார். நீங்கள் உங்களுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பார்த்தீர்களா? உங்களுடைய ஆத்துமா எதற்காக வசீகரிக்கப்படுகிறதோ, அதைத்தான் நீங்கள் புசிப்பீர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள்... 140 நான் இப்பொழுது இதை மீண்டும் வாசிக்க விரும்புகிறேன். அவன் ஆவியில் இருந்தான். ஆவியானவர் அவன்மேல் வந்தார். அவன் காரியங்களைக் காணத் துவங்கினான். இப்பொழுது கவனியுங்கள். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; கேட்டேன். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 141 "எக்காளம். எக்காளம் என்பது ஒரு "அறிவிப்பு" ஆகும். காபிரியேல், கர்த்தருடைய வருகையிலே தேவ எக்காளம் ஊதுவான். இது தேவனுடைய எக்காளம் ஊதுதலாய் இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் உலகத்தின் நித்திய இலக்கை அறிவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். ஒரு எக்காளம், அது என்ன? "ஆயத்தமாகுங்கள். சபைக்கு அளிக்கும்படியாக நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை உங்களுக்கு அளிக்கப் போகிறேன். பெற்றுக் கொள்கிறவர்களுக்கும், புறக்கணிக்கிறவர்களுக்கும், உலகத்தின் இலக்கு என்னவாயிருக்கும் என்பதை நான் உன்னிடத்தில் பேசுவேன்." 142 ஒரு தேவ எக்காளம். "கவனம்!" ஒவ்வொரு மனிதனும், எக்காளம் ஊதும்போது, அவன் தன்னுடைய பட்டயத்தை எடுத்து, ஒரு இடத்தில் ஆயத்தமாக நிற்கிறான், கவனியுங்கள். எக்காளம்! 143 பவுல், "அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?" என்று கூறினான். 144 அந்தவிதமாகத்தான் அது இன்றைக்கும் உள்ளது. ஓ, சகோதரனே, நான் சுற்றும் முற்றும் பார்க்கும்போது, இந்தக் குளிர்ந்த, சடங்காச்சாரமான, அலட்சியமான சபைகள், அதைப் போன்ற காரியங்கள், "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிற" ஒரு மனிதன் எப்படி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியும்? ஒரு விளங்காத சத்தத்தைக் கொடுக்கிறது. 145 "நல்லது, இப்பொழுது, நான் சபைகளில் சேர்ந்து கொள்வேன். நான் மெத்தோடிஸ்டு, அல்லது பாப்டிஸ்டு, அல்லது லூத்தரன் அல்லது பெந்தேகோஸ்துக்களை சோதித்துப் பார்ப்பேன். நான் ஒரு காரியத்தைச் செய்வேன். நான் ஒருவிதமான அசைவைச் செய்வேன்" என்று கூறுகிறார்கள். ஓ, அதுவல்ல அது. 146 "ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால்." அவன் மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பெந்தேகோஸ்தேவாகவோ அல்லது யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்; நீங்கள் இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள். ஆமென். 147 பாருங்கள்: .......எக்காள சத்தம், என்னை நோக்கி: நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன் என்று... 148 முதல் காரியம்...அவர் இங்கே அறிமுகப்படுத்துகிறார் "நான், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்." முதலாவது காரியம், தேவ எக்காளம் தொனித்தபோது, அவன் திரும்பினான். மேலும் அவர், "நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நான் A முதல் Z வரை உள்ளவர். இப்பொழுது நான் முழுவதுமாக இருக்கிறேன். சற்று நேரம் நின்று எனக்குச் செவிகொடுங்கள்" என்றார். சரி. முந்தினவரும் பிந்தினவரும்...நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, (நாம் வாசித்துக் கொண்டிருக்கிற இந்தப் புஸ்தகத்தை)...அனுப்பு.... 149 எங்கே? குறிப்பாக உரையாற்றினார். அந்தக் காலத்திற்கே எங்கே திரும்பிச் சென்றது? இல்லை. "சபைக்கு." சபைக்கு. கவனியுங்கள். நீ கண்டவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற..ஏழு சபைகளுக்கும் அனுப்பு... 150 அது சபைக்கு ஒரு மாதிரியாயிருந்தது. இப்பொழுது, நாம் அதற்குள்ளாகச் செல்வோம், இன்னும் ஒரு சில நிமிடங்களில், பழைய ஏற்பாடு எவ்வாறு ஏழு காலங்களுக்கு முன்னடையாளமாயுள்ளது என்பதைக் காண்பிப்போம். ஏழு காலங்கள் இல்லை ஏழு சபைகள் இங்கே ஆசியாவிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது, அது ஒரு நிழலாக அல்லது வரப்போகும் ஏழு சபைக் காலங்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தேவனுடைய ஒத்தாசையினாலும், வேதாகமத்தைக் கொண்டும், ஒவ்வொரு சபைக் காலமும் அது கூறியுள்ளபடியே சரியாக அமைந்திருந்தது என்பதை நிரூபிக்க முடியும், வேதம் அது செய்யும் என்று கூறினதை அப்படியே சரியாகக் இருக்கும். நாம் கடைசி சபையின் காலத்தின் முடிவில் இருக்கிறோம். 151 பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிச் சென்று, தானியேலின் சொப்பனத்தை எடுத்து, புறஜாதி இராஜ்ஜியத்தைக் குறித்த தரிசனத்தை அவனுக்குக் காண்பியுங்கள், தலை பொன், மார்பகம், வெள்ளி மார்பகம், வெண்கலம் போன்ற ஒரு சொரூபத்தை அவன் எப்படி கண்டான், பாதங்களும், கால்களும் இரும்பும் களிமண்ணுமாயிருந்தது. சரியாக வேதம் கூறியுள்ள விதமாகவே, அந்த இராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றும் எப்படி ஒன்றுக்கொன்று வெற்றி பெற்றுள்ளன என்பதை காண்பித்தது. பாருங்கள், பொன் தலை, பாபிலோன்; மேதியரும் பெர்சியாவும், கிரேக்க மொழியும்; ரோம சாம்ராஜ்யத்தையும்; ரோம சாம்ராஜ்யம் கிழக்கு மற்றும் மேற்கு ரோமாபுரி முதலிய பத்து இராஜ்யங்களாக உடைந்தன. அங்கே, இரும்பும் களிமண்ணும் ஒன்று சேர்ந்து கலக்கவில்லை. புராட்டஸ்டெண்டுகளும் கத்தோலிக்க மதத்தினரும் ஒரே புறஜாதி ஆதிக்கத்தின் கீழ் இருந்தனர். ஒருவர் மற்றொருவருடைய வல்லமையை முறித்துக் கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் விவாகம் செய்து கொள்வார்கள் என்றும், சரியாக இன்றைக்கு அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள், சரியாகவே. 152 அந்த இராஜாக்களின் நாட்களில் அந்த இராஜ்ஜியம், பரலோகத்தின் தேவன் கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்லை மலையிலிருந்து வெட்டி, இந்தச் சிலையின் பாதங்களில் மோதி, புறஜாதி இராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கிப்போட்டது. கிறிஸ்துவின் இராஜ்யம் ஆளுகை செய்து, ஆளுகை செய்து, வளர்ந்து, பூமியையும், சமுத்திரத்தையும், வானத்தையும் நிரப்பிற்று. புறஜாதி இராஜ்ஜியங்கள் அடிக்கிற அடியைப் போலவும், கோடைக்காலத்தில் போரடிக்கும் களத்தின் உமியைப் போலவும் மறைந்துபோயின. நாம் என்ன ஒரு காட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது உண்மை. 153 இன்றைக்கு கத்தோலிக்கரும், பிராடெஸ்டெண்டுகளும் ஒருவருக் கொருவர் திருமணம் செய்து கொள்வதைக் காண்கிறீர்கள். உங்களுடைய பிள்ளைகளை வளர்க்க, அவர்களை இந்த விதமாக அல்லது அந்த விதமாக வளர்ப்பதாக வாக்குப்பண்ண வேண்டும். இன்னும் ஒரு சில இரவுகளில் நாம் அதற்குள்ளாகப் பார்ப்போம். அதைக் கவனியுங்கள், அது எப்படியுள்ளது என்றும், எப்படி (மற்றது) இரும்பின் வலிமையானது மற்றொன்றின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அதைச் சுக்குநூறாக உடைத்து நொறுக்கினது. 154 ஆனால் ஆட்டுக்குட்டியானவர் வந்து நின்றார். அந்நாளில் உள்ள பரிசுத்த ஜனங்கள்... 155 எப்படியாய் அந்த ரோம வல்லமை ஒவ்வொரு தேசத்தினூடாகவும் சென்றது. உலகத்தில் வேறொரு வல்லமை இல்லை, அது ஒரே ஒரு வழியினூடாகச் செல்ல முடியும், அது கத்தோலிக்கத்தின் மூலமாகும், கத்தோலிக்க சபையானது, உலகம் முழுவதிலும், அங்கே பரவிக் கொண்டிருக்கிறது. அது இங்கே ஒரு அற்புதமான, மகத்தான படமாய் உள்ளது. 156 இப்பொழுது, ப்ராடெஸ்டெண்டுகளாகிய உங்களுக்கு, நீங்கள் ஆயத்தமாயிருங்கள், ஏனென்றால் சகோதரனே, நீங்கள் அதனோடு இணைந்து இருக்கிறீர்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் என்னால் அதை நிரூபிக்க முடியும், மற்றவர்களைப் போலவே, நீங்களும் அதற்குள்ளாகச் இணைந்து இருக்கிறீர்கள். 157 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், "முந்தினவரும் பிந்தினவரும். நீ எதைக் காண்கிறாயோ, அதை ஒரு புஸ்தகத்தில் எழுது" என்றார். இப்பொழுது, அவர் அவனை நோக்கி: இதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற... சபைகளுக்கு அனுப்பு எபேசு, சர்தை, பெர்கமு... மற்றும் இன்னும் பல, மற்றும் பிலதெல்பியா, மற்றும்... லவோதிக்கேயா. 158 இப்பொழுது நாம் ஓரிரண்டு விநாடிகள் அங்கே நிறுத்திக் கொள்வோம், எனக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்று பார்ப்போம். ஏனென்றால் நான் எபேசு சபையின் பேரிலான இந்தக் கடைசி முக்கிய உரையை இங்கே எடுத்துக் கொண்டு, லவோதிக்கேயாவைப் பற்றிப் பார்ப்போம், நாம் அதே சபையில் மாதிரியாக அமைக்கப்படவில்லையா என்றும், பாருங்கள், நாம் இந்த நாளில் ஜீவிக்கவில்லையா என்று பார்ப்போம். 159 ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, எழும்பிப் பிரகாசி. பாருங்கள். நீங்கள் உணரவில்லை. நான் உங்களுக்கு ஒருவிதமான அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அவருடைய மகத்தான வல்லமையில் வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன் நீங்கள் இந்த வேதாகமத்தை பற்றிப் பிடித்து, "நான் இதைப் பார்க்கட்டும்" என்று கூறும் ஒரு இடத்திற்கு உங்களை அசைக்கும்போது; நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழுந்து கொண்டிருக்கிறது, வேதம் முன்னுரைத்த அடையாளங்கள்; புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்பட்டு, திகில்கள் சூழ்ந்துள்ளன; ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்பி வாருங்கள்." (அது உண்மை.) மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்களுடைய தீவட்டிகள் சுத்திகரிக்கப்பட்டு, மேலே நோக்கிப் பாருங்கள்! உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது. 160 அது உண்மை. ஓ, என்னே ஒரு நாள்! "அதை எழுதி, அதைச் சபைகளுக்கு அனுப்பு." 161 இப்பொழுது, இஸ்ரவேல் தன்னுடைய அழகில் உள்ளே நுழைந்தது போல, ஆதியில் ஆபிரகாமின் கீழ், கோத்திரப் பிதாக்கள் மூலம் தோன்றினர். ஆகாபின் நாளில் அது இருண்ட காலங்களுக்குள் சென்றது, சபையானது கண்ட இருண்ட காலத்திற்குள் சென்றது. அங்கிருந்து வெளியே சென்று...அந்த நேரத்தில், எப்படியாய் ஆகாப் யேசபேலை விவாகம் செய்து கொண்டான், அது மரபுவழி சபைக்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்தது. 162 அதே காரியம், அதாவது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில் இருளின் காலங்களில் புராட்டஸ்டெண்டுகள் ரோமானியக் கொள்கையை மணந்து கொண்டனர், பெர்கமு சபையில், கிறிஸ்தவ மார்க்கத்தின் ரூபத்தின் கீழ், விக்கிரகாராதனையோடு வெளியே வந்து, நமக்கு முன்பாக வந்து கொண்டிருக்கிற வெதுவெதுப்பான காலத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது அதற்குள்ளாக இருக்கிறோம். நாம் வெதுவெதுப்பான காலத்தில் இருக்கிறோம். 163 நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது நான் அமர்ந்துகொண்டு மற்ற சபைகளில் உள்ள ஜனங்களாகிய உங்களிடத்தில் பேசப்போகிறேன். நீங்கள் ஒரு வெதுவெதுப்பான காலத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய சுவிசேஷகர்கள் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, பூமி முழுவதும், அது போன்ற காரியங்களைப் பிரசங்கிக்கிறீர்கள்; நீங்கள் முன்னேறவில்லை. நீங்கள் சத்தம் போடுறீங்கள்...நீங்கள் பாப்டிஸ்டுகள் கூச்சலிடுகிறீர்கள், "1944-ல் இன்னும் ஒரு பத்து லட்சம்." நீ அவற்றைப் பெற்றபோது உங்களிடம் என்ன இருக்கிறது? ஒரு கூட்ட பாவிகள் தங்கள் பெயர்களைப் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளனர் (அது உண்மை.), அவர்கள் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். அது மாத்திரமல்ல, ஆனால் மற்ற மெத்தோடிஸ்டுகள், காம்ப்பெல்லைட்டுகள், மற்றும் முழு குழுவும், சம்பிரதாயமான, அலட்சியமாயிருந்தனர். பில்லி கிரஹாம், "ஆறு வாரங்களில் முப்பதாயிரம் பேர் மனமாற்றமடைந்தனர்" என்றார்... ஆறு வாரங்கள் கழித்து அவரால் முப்பது பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன்? ஏன்? துவக்கத்திலேயே அவர்கள் ஒன்றுமே பெற்றிருக்கவில்லை. ஒரு கூட்ட பாவிகளே, அவர்கள் தங்களுடைய பெயரை, ஒரு எழுப்புதலின் மயக்கத்தின் கீழ் புத்தகத்தில் எழுதினர். 164 அவர், "பரலோக ராஜ்யம் கடலில், வலையைப் போடுகிற ஒன்றாக உள்ளது. அவன் இழுத்தபோது, அவனுக்கு எல்லாம் கிடைத்திருந்து." அவன் ஆமைகளைப் பிடித்திருந்தான். அவன் நண்டு மீன் பிடித்திருந்தான். அவன் உணவு ஆமைகளைப் பிடித்திருந்தான். அவன் சிலந்திகளைப் பிடித்திருந்தான். அவன் வண்டுகளைப் பிடித்திருந்தான். அவன் சர்ப்பங்களை பிடித்திருந்தான். அது உண்மை. ஆனால் அங்கே, அவன் சில மீன்களையும் கூடப் பிடித்திருந்தான். 165 ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் வல்லமை மற்றும் கிரியையின் கீழ் ஒரு எழுப்புதலைப் பிரசங்கிக்கும்போது, வலையானது ஜனங்களைச் சுற்றி இழுக்கிறது. அது உண்மை. ஆனால் அவன் துவக்கத்தில் ஒரு பூச்சியாயிருந்தால், அவன் எழுப்புதலின் முடிவிலும் ஒரு பூச்சியாய் இருக்கிறான். 166 அவன் ஒரு தண்ணீர் சிலந்தியாயிருந்தால், முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அவன் போய்ச் சுற்றும் முற்றும் பார்த்து, "நான் எப்படியும் இந்தப் பழைய காரியத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை" என்று கூறிவிட்டு, தண்ணீருக்கு திரும்பவும் சென்றுவிடுகிறான். 167 அவன் ஒரு பாம்பாயிருந்தால், அவன், "நான் அதைக் குறித்து உங்களிடம் கூறினேன்" என்று கூறி, அது அங்கிருந்து சென்றுவிடும். அவன் துவக்கத்திலேயே ஒரு பாம்பாயிருந்தான், அவனுடைய சுபாவமாயிருந்தது. அந்தச் சுபாவம் மாற்றப்படும் வரையில் அவன் வேறொன்றுமில்லை. 168 ஒரு மனிதன் சபையில் சேர்ந்துகொள்ளவோ, அல்லது உணர்ச்சிவசப்படுகிற எந்தக் காரியத்தையும் தூண்டிவிட்டு, அல்லது வேறு எதுனாலும் ஒரு கிறிஸ்தவனாக ஆக முடியாது. அது ஆவியின் திடமான பிறப்பாயிருக்க வேண்டும்; உத்தமம், மரித்துப் போவது, கதறி அழுவது, இரண்டு முறை மரிக்கும் வரை அங்கேயே கிடப்பது. மரணத்திலிருந்து மாத்திரமே ஜீவன் வெளியே வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 169 ஒரு தானிய மணி, அது நிலைத்திருந்தால், அது தனித்து நிலைத்திருக்கும், அது அந்த ஒரு தானிய மணியாய் இருப்பதை தவிர வேறொன்றையும் ஒருபோதும் பொருட்படுத்தாது. "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தாலொழிய தனித்திருக்கும்." ஆனால் அது அங்கே விழும்போது, அது அழுகிப் போய், மாசுபடுத்தி, அந்த அழிவின் மத்தியிலிருந்து ஜீவனின் உயிரணுக்கள் தோன்றி அதற்கு ஜீவனை அளித்து, அதிகமாக உற்பத்தி செய்கிறது. 170 சபையானது மறுபடியும் பிறந்து, அதனுடைய கோட்பாடுகளுக்கும், வேத சாஸ்திரங்களுக்கும், போன்றவற்றிற்கு மரித்துப் போகாவிட்டால், தேவனுடைய ஆவியினால் புதியதாகப் பிறக்கும்போது, அது பழமை, குளிர்ச்சியான, சம்பிரதாயமான, தேவபக்தியற்றதாய், அக்கறை யற்றதாய் இருக்கும். ஆமென். அது உண்மை. அது பண்டைய நாகரீகமான, சுகாதாரமான எண்ணெயைப் போன்ற பிரசங்கம், ஆனால் சகோதரனே, அது உங்களை இரட்சிக்கும். அது உண்மை. புயல்கள் பலமாக வீசும்போது அது உங்களைக் காத்துக்கொள்ளும். வேரூன்றி, அடித்தளமிடப்படும். நீங்கள் உங்களுடைய கற்காரையை ஊற்றுவதற்கு முன்பு, எல்லா அழுக்குகளையும் துடைத்து விடுங்கள்; கவனியுங்கள், அது உண்மை, நங்கூரக் கம்பிகள் இறுகக் கீழே இறங்குகிறது. ஓ, சகோதரனே, நாம் என்ன ஒரு நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; சம்பிரதாயமான, அலட்சியமான சபைக்காலம்! ஆம், ஐயா. "ஏழு சபைகளுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு" என்றார். 171 இப்பொழுது, அந்தச் சபையின் காலத்தில், அவர்கள் உள்ளே வரத் துவங்கினர்; அவர்கள் விக்கிரகாராதனைக்கு விவாகம் செய்து கொண்டனர். அவர்கள் இப்பொழுது அதேக் காரியத்தைச் செய்கிறார்கள்; அவர்கள் உள்ளே வந்து அதேக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து, சம்பிரதாயமான கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் வந்து, நாம் கடைசி சபைக் காலத்திற்குள் வரும் வரையில் மறைந்து போகத் துவங்குகிறோம். 172 இப்பொழுது, நாம் "ஸ்தாபனம்" என்று அழைக்கின்ற நவீன சபை, பரிசுத்த ஜனங்களாகிய நம்மை, நீங்கள் அறிவீர்கள், நாம் அவர்களை "நவீனமானவர்கள்" என்று அழைக்கிறோம், அவர்கள் அங்கே சென்று, அவர்களும் கூடத் தங்களுடைய எழுப்புதலில் துவங்குகிறார்கள். நீங்களோ, "அவர்கள் முன்னேறவில்லை." என்று கூறலாம். 173 ஆனால் இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் என்ன பெற்றுள்ளோம்? அவர்கள் பெற்றுள்ளதைக் காட்டிலும் அதிகமாக ஒன்றையும் பெற்றிருக்கவில்லை. அது முற்றிலும் உண்மை. நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, சச்சரவிட்டு, ஒழுக்கக் கேடாக இருக்கும் வரை, நாம் இன்னும் மனிதர்களாகவே நடந்து கொள்கிறோம்; ஒரு மனிதன் பீடத்தண்டை இறங்கி வந்து தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளும் வரை, அவன் சிறு காரியங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, ஒரு கிறிஸ்தவனைப் போல முன்னேறிச் செல்ல வேண்டும். பானை கெட்டியை கறுப்பு என்று அழைக்க முடியாது. சரி. அவர்களைப் பார்த்துக் கூச்சலிடாதீர்கள். நாம் முதலில் நம்முடைய சொந்த நடைகளை சுத்தம் செய்வோம். 174 அந்நியர்களே, எங்களை மன்னிக்கவும், இப்பொழுது நான் சபைக்கு ஒரு சிறு சுவிசேஷத்தைக் கொண்டு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். கவனியுங்கள், அது உண்மை. அதுவே உங்களுக்குத் தேவையாயுள்ளது. 175 "ஓ," நீங்களோ, "நாங்கள் அதைப் பெற்றுவிட்டோம்" என்று கூறலாம். அங்கே எழுந்து நின்று, இசைப் பேழையை முடிந்த அளவு கடினமாக இசைத்து, ஒரு கொத்து பறைகளை அடித்து, தரையில் மேலும் கீழுமாக ஓடி, வெளியே சென்று அண்டை வீட்டாரோடு சண்டையிடுவீர்கள். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா? ஹூ-ஹூ இல்லை ஐயா. நாம் பெற்றுள்ள ஒரே காரியம் வெதுவெதுப்பாகும். இசை இசைக் கொண்டிருக்கும் வரை, நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். இசை நிற்கும்போது, நாம் நின்று விடுகிறோம். சகோதரனே, மற்ற நபரை ஏதோ ஒன்று என்று அழைக்காதீர்கள்; நாம் முதலில் உங்களுடைய சொந்த கதவைச் சுற்றிப் பார்ப்போமாக. ஆமென். 176 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேசத்தில் நாம் வழக்கமாகக் கொண்டிருந்ததைப் போன்ற ஒரு பண்டைய-நாகரீக எழுப்புதல் நமக்குத் தேவை, அவர்கள் இரவு முழுவதும் முகங்குப்புறக் கிடந்தனர். அவ்வாறு உணர்ச்சிவசப்படுவது மட்டுமின்றி, உண்மையான தேவவபக்திக்குரிய துக்கமாக இருக்கும்போது; பீடத்திற்குத் திரும்பிச் சென்று தரித்திருக்காமல், ஆனால் வெளியே சென்று, அவர்கள் தவறு செய்திருந்த அண்டை வீட்டாரோடு அதைச் சரிப்படுத்திக் கொள்ளும்படி, சரிசெய்து கொள்வார்கள். அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். சுட்டெரிக்கும், ஆனால், சகோதரனே, அது உங்களுக்கு உதவி செய்யும். அது உண்மை. என் நண்பனே, நீ அதை அறிந்து கொள்ள வேண்டும். ஆம், ஐயா. 177 ஒரு வெதுவெதுப்பான நிலையில், சபை ஒரு பயங்கரமான நிலையில் உள்ளது. நீங்கள் கவனிக்க வேண்டாம், பிரான்ஹாம் கூடாரமும் ஏறக்குறைய அதே அசைவில் உள்ளது. கவனியுங்கள், நீங்கள் இந்தக் காரியங்களை அறிவீர்கள். அது வருடா வருடம், வருடா வருடம், வருடா வருடம், இந்த மேடையின் மேல் வரப்போகும் காரியங்களைக் குறித்து உங்களை எச்சரித்துக் கொண்டே வருகிறது. கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கு மற்றும் தெற்காகவும் அவர்கள் செல்லும் ஒரு காலம் இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது, தேவனுடைய உண்மையான வார்த்தையைக் கண்டறிய முயற்சித்தும், அதைக் கண்டறியத் தவறுகின்றனர். நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ள இடத்தில் நீங்கள் நங்கூரமிடப்படுவது நல்லது. 178 ஆனால் ஒரு மனிதன் மீண்டும் ஒரு முறை பிறக்கும்போது; உணர்ச்சிவசப்படுதலினால் தூண்டிவிடப்படாமல், ஏதோ ஒரு உற்சாகத்தோடு அல்ல, தன்னுடைய பெயரை ஒரு சபை புத்தகத்தில் பதிவு செய்வதனால் அல்ல, நகரத்திலேயே மிகப்பெரிய சபையில் சேர்ந்து கொள்வதனால் அல்ல, ஆனால் அவன் உண்மையாகவே அழுது, தன்னுடைய கண்களில் கண்ணீரோடு கெஞ்சி, தேவன் அவனுடைய பாவங்களை மன்னித்து, அவனுடைய ஆத்துமாவை பாவ வாழ்க்கையிலிருந்து சுத்திகரித்து, அவனைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பும் வரை; மிகுந்த அன்போடும், தேவபக்தியோடும், அவன் அண்டைவீட்டாரிடமிருந்து திருடிய பழைய டயர் கருவிகளைத் திரும்பக் கொண்டு வந்து, இந்தக் காரியங்களைச் சரிசெய்து, மனுஷருக்கு முன்பாகத் தேவபக்தியாய் ஜீவிக்கிறான். நாம் அதைப் பெற்றுக்கொள்ளும் வரையில் நமக்கு இந்தத் தேசத்தில் ஒரு எழுப்புதலே இருக்காது. 179 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வார்த்தையின் மூலம் தேவனுடைய வீட்டில் துவங்குகிறது. ஆமென். ஒரு பாடப்புத்தகம் அல்ல, ஆனால் வேதாகமம். சில சபைகள் தங்களுடைய வேத சாஸ்திரத்தில் என்ன போதிக்கிறது என்பதல்ல, ஆனால் தேவன் என்ன கூறுகிறாரோ அதையே செய்கின்றனர். அப்பொழுது உங்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருக்கும், அங்கே மகத்தான வல்லமைகளும், அதிசயங்களும், அடையாளங்களும், அற்புதங்களும், மற்ற யாவும் சம்பவிக்கும். 180 நாம் வெதுவெதுப்பாக இருக்கிறோம். இந்தக் காலத்தில் நாம் வெதுவெதுப்பானவர்களாக இருப்பதால், தேவன், "நான் உங்களை என் வாயிலிருந்து வாந்திப்பண்ணிப்போடுவேன்" என்றார். இந்தச் சபைக்காலம் புறக்கணிக்கப்படும். அதிலிருந்து மீதியாயிருக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். எனவே நீங்கள் இப்பொழுது அந்த மீதியாயிருக்கிறவர்களாயிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய உங்களை நீங்களே குறித்துக் கொள்வது நல்லது. தேவனுக்குச் சித்தமானால், இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதற்குள்ளாகப் பார்ப்போம். இப்பொழுது சற்று கவனியுங்கள். அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; (பாருங்கள். திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,......... 181 அல்லது, "விளக்குத்தண்டுகள்" என்று கிரேக்க பாஷைக் கூறுகிறது. இப்பொழுது, அதுவே முதல் மொழிபெயர்ப்பாகும், ஏனென்றால் அவர்கள் மெழுகுவர்த்தியை உடையவர்களாயிருக்கவில்லை...அவர்கள் சிறிய விளக்குத் தண்டை உடையவர்களாயிருந்தனர். இப்பொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகள், நாம் அவைகளை அவைகளை அவ்வாறே அழைக்கிறோம். 182 இப்பொழுது, பரிசுத்த ஸ்தலத்தில், சமுகத்தப்பம்; குருமார்களாகிய உங்களில் அநேகர் அதைப் புரிந்துகொள்கிறீர்கள். இங்கே கூடாரத்தில் உள்ள ஜனங்களாகிய நீங்கள், இங்கே ஒரு நல்ல போதகரிடம் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள்-நீங்கள் இந்தக் காரியங்களை அறிந்திருக்கிறீர்கள். 183 ஏழு பொன் குத்துவிளக்குகள், அவைகள்...அவைகளுக்கு மேலே சிறிய விளக்குகள் இருந்தன, அவை எண்ணையினால் எரிகின்றன. சகரியாவில், அவன் கண்ட தரிசனத்தில், அவன் காட்டு ஒலிவ மரத்தையும், அடக்கமான ஒலிவ மரத்தையும் கண்டான் என்று நான் நினைக்கிறேன்; யூதனும் புறஜாதியாரும், புறஜாதியாரின் காலத்திற்கு முன்பே. அவர்கள் பொன் தூபகலசங்களை உடையவர்களாயிருந்தனர். இந்த இரண்டு பொன் கலசங்களும் இங்கே இந்த ஒரு குத்துவிளக்கிற்குள்ளாக ஓடி, எல்லா விளக்குகளுக்கும் எண்ணெயை நிரப்பினது. இந்தக் காரியங்கள் எப்படியிருந்தன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்டு ஒலிவ மரம் மற்றும் அடக்கமான ஒலிவ மரம். நிச்சயமாகவே அடக்கமான ஒலிவ மரமானது முறிந்துபோய், காட்டு ஒலிவ மரமானது அதில் ஒட்டப்பட்டிருந்தது. 184 அந்த எண்ணெய் விளக்கிற்கு, எண்ணெய் எப்பொழுதுமே "பரிசுத்த ஆவியை" குறிக்கிறது. நாம் வெள்ளிக் கிழமை இரவு ஜனங்களைக் குறித்த குறியிடுதலைக் குறித்துப் பார்ப்போம். கவனியுங்கள், ஆனால் இந்த எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. எனவே தான் நாம் வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசுகிறோம், ஏனெனில் அது பரிசுத்த ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 185 வேதம் வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரத்தில் கூறியுள்ளது, வாதையானது கடந்து சென்றபோது, அவர், "ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமை, ஒரு பணத்துக்கு இரண்டுபடி வாற்கோதுமை; ஆனால் என் திராட்சரசத்தையும் எண்ணெயையும் சேதப்படுத்தாதே" என்றார். நாம் வெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு சில வாரங்களுக்கு எடுத்து, அந்தத் திராட்சரசமும் எண்ணெயும் யார் என்பதைப் பற்றிப் பார்ப்போம். "என் திராட்சரசத்தையும் எண்ணெயையும் சேதப்படுத்தாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். நீ அதனண்டை நெருங்காதே" என்றார். ஆமென். 186 இப்பொழுது, இந்தப் பொன் குத்துவிளக்குகளைக் கவனியுங்கள். இந்த எண்ணெய் இந்தக் குத்துவிளக்குகளில் ஊற்றப்படுகிறது. இப்பொழுது, எண்ணெய் விளக்கில் எரிய வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, ஆரோன்...இந்த விளக்குகளைக் கொளுத்த வேண்டியது அவனுடைய கடமையாயிருந்தது. இந்த விளக்குகள் எரிய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது அதைப் பற்றிக் கொள்ளுங்கள். பாருங்கள். பயபக்தியோடிருந்து, செவிகொடுங்கள். இந்த விளக்குகள் தேவன் பற்றவைத்திருந்த அக்கினியினால் எரிய வேண்டியதாயிருந்தது. ஆரோனின் குமாரர்கள் அந்நிய அக்கினியோடு உள்ளே சென்றனர், தேவன் அவர்களை வாசலில் கொன்று போட்டார்; அது உண்மை, அந்நிய அக்கினி. தேவன் மூட்டின அக்கினி! 187 இப்பொழுது, கவனியுங்கள், குத்துவிளக்குகள் ஒரு வளைவில் ஓடுகின்றன. இங்கே ஒரு குத்துவிளக்கு இரண்டு, மூன்று, நான்கு (உயரத்தில்), ஐந்து, ஆறு, ஏழு, இதைப் போன்று இருந்தது. இப்பொழுது, இங்கே அந்தப் பொன் குத்துவிளக்குகள், ஒரு சில நிமிடங்களில் அவர் கூறுகிறார். 188 நாம் இன்னும் கொஞ்சம் வாசிப்போம், நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். இப்பொழுது அவர் என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். சரி. "அவருடைய தலை..." நான் அங்கே 12வது வசனத்தை முந்திவிட்டேன் என்று நினைக்கிறேன், "ஏழு பொன் குத்துவிளக்குகள்." 13-ம் வசனம்: அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷ குமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது; 189 இப்பொழுது, நாம் அங்கே ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்வோம், ஏனென்றால் நாம் அந்த காட்சியை அங்கே அப்படியே விட்டுவிட முடியாது. இப்பொழுது இங்கு நிற்கும் இந்தக் குத்துவிளக்குகளைப் பாருங்கள். பாருங்கள், அந்தக் குத்துவிளக்குகள் ஏழு சபைக் காலங்களைக் குறிக்கின்றன என்பதை நாம் சற்று கழித்து கண்டறியலாம். அவைகள் எபேசு, பெர்கமு, பின்னர் பிலதெல்பியா, வரை, பின்னர் லவோதிக்கேயா வரை; ஏழு சபைக் காலங்களைக் குறிக்கின்றன. 190 இந்தச் சிறிய குத்துவிளக்குகள் ஒவ்வொன்றும் அங்கே ஒரு சிறு கலசம் எண்ணெயை வைத்திருந்தன, இந்த எண்ணெய் இந்த மெழுகுவர்த்தியின் மேல் எரிகிறது. ஒரு மெழுகுவர்த்தி தேவனுடைய அக்கினியால் எரியூட்டப்பட்டபோது, அவர்கள் அந்த மெழுகுவர்த்தியை எடுத்து, மற்றொன்றில் கொளுத்தி; அதன்பின்னர் அதை கீழே வைத்து; மற்றொன்றைக் கொளுத்தி; மற்றொன்றிலிருந்து மற்றொன்றிலிருந்து, மற்றொன்றிலிருந்து மற்றொன்றிலிருந்து எரிந்து, கடைசி மெழுகுவர்த்தி வரை. கவனியுங்கள், அதே எண்ணெய். 191 இப்பொழுது, இந்த ஏழு சபைக்காலங்கள் எபேசுவில் துவங்கி, தியத்தீரா, பெர்கமு, மற்றும் பலவற்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து வருகின்றன. தேவனுடைய எண்ணெயாகிய பரிசுத்த ஆவியானது ஆதியிலே எபேசுவிலுள்ள சபையின் மேல் விழுந்தது, எபேசு சபை, அது கிருபையின் சபையாயிருந்தது. பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் அங்கே "ஆமென்" என்று சத்தமிட வேண்டும். அதன்பின்னர் எபேசுவிலுள்ள கிருபையின் சபையின் பேரிலும், உலகத்தோற்றத்திற்கு முன்பு நாம் யாராக இருந்தோம் என்பதை எபேசியர் நிரூபம் நமக்குக் காட்டுகிறது, அது அங்கே விழுந்தது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். 192 ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள், என்னுடைய பாப்டிஸ்டு சகோதரனே, அவர்கள் எப்படி அதைப் பெற்றார்கள்? அவர்கள் எப்படி அதைப் பெற்றுக் கொண்டனர்? சபையில் சேர்ந்து கொள்வதன் மூலமா? ஒருபோதும் இல்லை. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அதைப் பெற்றுக் கொண்டனர். நீங்களோ, "ஆம், சகோதரன் பிரான்ஹாம், அது உண்மை" என்று கூறலாம். அது உங்கள்மேல் விழுந்தபோது உங்களுக்கு என்ன சம்பவித்தது? 193 கவனியுங்கள், எபேசுவில் எண்ணெயை எரித்த அதே அக்கினி, தியத்தீராவிலும் அதை எரித்தது; அங்கே எரிந்த அதே அக்கினி, பெர்கமுவிலும் அதை எரித்தது; லவோதிக்கேயா சபைக் காலத்திற்குள் எரிந்து கொண்டிருக்கிறது. அதே பரிசுத்த ஆவியானவர், அதே தேவனால், அதே அக்கினியால் பிரகாசிக்கிறார். பெந்தேகோஸ்தேவின் மேல் விழுந்த அக்கினியானது, ஒவ்வொரு காலத்தினூடாகவும், சபையானது இப்பொழுதும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளது. 194 ஆனால் அதனுடைய தொல்லை என்னவெனில், நாங்கள் பாப்டிஸ்டுகள், நாங்கள் மெத்தோடிஸ்டுகள், நாம் இங்கே வெகுதூரத்தில் பின்னால் இருக்கிறோம். ஏதோ ஒரு சரித்திரப்பிரகாரமான காரியத்தை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், இங்கே சபையானது இங்கே கீழே செல்கிறது. அது உண்மை. அங்குதான் நாம் பின் தங்கியிருக்கிறோம். ஒவ்வொரு சபையும், அது துவங்கினபோது, அங்கே இல்லை... 195 முதல் சீர்திருத்தத்தில் லூத்தரைப் பாருங்கள். என்ன ஒரு எழுப்புதல், லூத்தர். பாருங்கள், நான் அவருடைய பாடப் புத்தகத்தை வீட்டில் வைத்துள்ளேன். அந்த மனிதன் தேவனுடைய வல்லமையினால் எப்படியாய் அசைத்தார்! எப்படியாய் அவர் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டு, தாமே அதை ஏற்றுக்கொண்டார்; மார்டின் லூத்தர் அந்நிய பாஷைகளில் பேசுமளவிற்கு தேவனுடைய வல்லமையை அதிகமாக விசுவாசித்தார். அது முற்றிலும் உண்மை. மார்டின் லூத்தர் அந்நிய பாஷைகளில் பேசினார். 196 அதன்பின்னர் ஜான் வெஸ்லியின் காலம் வந்தது. ஜான் வெஸ்லியும் அதேக் காரியத்தைச் செய்தார். அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அவர், "நான் முணுமுணுக்கிற, நானே அறியாத இந்த வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். அது உண்மை, அந்நிய பாஷைகளில் பேசுதல்; தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருந்தார். அவர் அமெரிக்காவிற்கு வந்தபோது, இங்குள்ள சபைகள் அவரை இன்றைக்கு பரிசுத்த உருளைகள் நடத்துவது போலவே, அவர்கள் அவரைச் சபைகளுக்கு வெளியே தள்ளினர். அவர்கள் அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, தேவனுடைய வல்லமையின் கீழ் விழுந்து, அவர்கள் இரவு முழுவதும் ஒரே நேரத்தில் தரையில் கிடந்தனர். 197 ஜான் வெஸ்லியின் சொந்த பாடப் புத்தகம், இப்பொழுது நான் வீட்டில் வைத்துள்ளேன், அவர் ஒரு நாள் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டிருந்தார். சுகவீனமாயிருந்த ஒரு ஸ்திரீக்காக ஜெபிக்கச் சென்றபோது, குதிரை விழுந்து அதனுடைய காலை உடைத்துக் கொண்டது. அவர் குதிரையிலிருந்து இறங்கி, ஒரு கலச எண்ணெய்யை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, அதன்மேல் ஏறிச் சென்றுவிட்டார். அதே அக்கினி அங்கே எரிகிறது. 198 ஆனால் நீங்கள் அதை ஏதோ ஒரு சடங்காச்சார முறைமைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அசைவாடிக் கொண்டிருக்கிறார். சரி. அது உண்மை. 199 மெத்தோடிஸ்டு சபையில், "அவர்களிடத்தில் ஏதோ கோளாறு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது, அவர்களுடைய புத்தகம், "அவர்கள் இழுப்புக்களைப் பெற்றுள்ளனர்" என்று கூறியுள்ளது. அவர்கள் நடக்கத் துவங்குவார்கள், அவர்கள் அசைந்து, குதித்து, அந்த விதமாக நடந்து கொள்வார்கள், மெத்தோடிஸ்டுகள் தங்களுடைய கூடாரக் கூட்டங்களிலும் மற்ற காரியங்களிலும் கலந்து கொண்டனர். ஏன், சகோதரனே, ஜான் வெஸ்லி காட்சியில் தோன்றினால், அவர் பிரசங்கித்த சுவிசேஷத்தைக் கொண்டு கசையடியாக; உங்களுக்கு ஒரு நல்ல சுவிசேஷத்தை அளித்தாலொழிய, அவர் உங்களைக் குறித்து வெட்கமடைவார், அவர் உங்களை மறுதலிப்பார்; 200 நான் அண்மையில், இந்த ஆலயத்தின் அருகில் நின்றேன். அங்குதான் அவர்கள் வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டிருந்தனர் அந்த நாளில் அவர் புதிய பிறப்பு, மற்றும் அதுபோன்றவைக் குறித்துப் பிரசிங்கத்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்தின் உயர்வான சபையோ அந்த நாய்களை அவர்மீது அவிழ்த்துவிட்டன. மேலும் அவர், "உங்கள் தலைக்கு மேலே சூரியன் அஸ்தமிக்கு முன்பு, நீங்கள் அவனுக்காக ஜெபிக்கும்படி என்னை மூன்று முறை அழைப்பீர்கள்" என்றார். அவன் அப்படியே அழைத்து; மரித்துப் போனான். அது உண்மை. நிச்சயமாக. 201 அதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. அந்தவிதமான மெதோடிஸ்டுகளே நமக்குத் தேவை. ஜான் ஸ்மித்தைப் போன்ற மற்றொரு பாப்டிஸ்டு நமக்குத் தேவை, அவர் அறையில் தங்கியிருந்து, தேவனோடு வேதனைப்பட்டு, இரவு முழுவதும் ஜெபித்து, அவனுடைய கண்கள் மிகவும் மோசமாக வீங்கிப்போகுமளவிற்கு, காலையில் அவருடைய மனைவி அவரைச் சாப்பிட மேசைக்கு அழைத்துச் செல்வாள். 202 ஓ, இன்றைக்கு நாம் என்ன செய்கிறோம்? நம்முடைய வாயில் ஒரு சிகரெட்டுடன், மூலையில் நிற்கிறோம்; சபையில் ஒரு உதவிக்காரராகவும், கீழே சென்று செயல்படவும்; இரவு முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்; சபையிலிருந்து விலகியிருக்கிறார்கள்; புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், குதிரைப் பந்தயங்களுக்கு ஓடி, தங்களையே பாப்டிஸ்டு என்று அழைத்துக் கொள்கின்றனர். எல்லாமே அடி முட்டாள்தனமாயிற்றே! 203 இன்றைக்கு நமக்குத் தேவை என்னவென்றால் மற்றொரு பண்டைய நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட, பரிசுத்த ஆவியின் எழுப்புதலேயாகும். ஆமென். நான் பொருட்படுத்திக் கூறவில்லை... நான் உங்களை உணர்ச்சிவசப்படச் செய்ய முயற்சிக்கவில்லை. நீங்கள் உணர்ச்சிவசப்படவில்லை என்பதை நான் அறிவேன், ஆனால், சகோதரனே, அதுதான் உண்மை. அந்தக் காரியத்தை உங்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். அது உண்மை. அதுதான் நமக்குத் தேவை. சரி. 204 இப்பொழுது, அதுதான் வேதாகமம். அதைத்தான் ஆவியானவர் கூறுகிறார், பாருங்கள். "குத்துவிளக்குகள்." சரி. இப்பொழுது 13-ம் வசனம். அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே... மனுஷகுமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். 205 என்ன? அவரைப் போன்ற ஒருவர். இது யாராயிருந்தது? அவருடைய மணவாட்டி. அவரைப் போன்ற ஒருவர். அது எப்படியிருந்தது என்பதைக் கவனியுங்கள். .......நிலையங்கி தரித்து,......... 206 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தம் அவளை மூடியுள்ளது. "தம்முடைய சொந்த இரத்தத்தினால் நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து கழுவினார்." சரி. ....மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த (ஒரு ஆண் அல்ல; ஒரு பெண்). (தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் கிறிஸ்துவின் சரீரத்தின் மேல் வைத்திருந்த சுவிசேஷம்.) 207 ஓ, என்னே ஒரு அழகான காட்சியை நாம் இங்கே பரிசீலனையில் பெற்றுள்ளோம்! இங்கே பாருங்கள்: .....நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது (நீதி, பரிசுத்தம், வெண்மை அதைக் குறித்துப் பேசுகிறது); அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; (அதன் மூலம் சரியாகப் பார்க்கிறார்.) 208 அவரிடமிருந்து மறைக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் யார் என்றும், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும் அவர் அறிந்திருக்கிறார். ஆம், ஐயா. அவர் எல்லாவற்றையும் காண்கிறார். ஓ தேவனே... 209 நம்மால் கூடுமானால், நான் இந்த மற்ற சபைக்காலத்திற்கு வருவதற்கு ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே உள்ளன. கவனியுங்கள். அவருடைய பாதங்கள்...பிரகாசமான வெண்கலம்போலிருந்தது;... 210 வெண்கலம் எப்பொழுதுமே "நியாயத்தீர்ப்பு," வெண்கல பலிபீடத்தை நீங்கள் அறிவீர்கள்; வெண்கல சர்ப்பம் போன்றவை. வெண்கலம் நியாயத்தீர்ப்பைக் குறித்து பேசுகிறது. ஆகையால் அவருடைய பாதங்கள், இயேசு கிறிஸ்துவின் சபையானது தெய்வீக நியாயத்தீர்ப்பின் பேரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்து நம்முடைய ஸ்தானத்தில் மரித்துக்கொண்டிருக்கிறார், நீதியான ஒருவர் அங்கே நம்முடைய நியாயத்தீர்ப்பை செலுத்துகிறார், அங்கே தேவனுக்கு முன்பாக, சிலுவையில் ஒரு பாவியாக மரித்து, அவருடைய ஆத்துமா பாதாளத்தில் இறங்கியது. தேவன் தம்முடைய பரிசுத்தர் அழிவைக் காண விடாமல், நாம் நீதிமானாக்கப்படுவதற்காக மூன்றாம் நாளில் அவரை எழுப்பினார்; நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய ஒரு பிரதான ஆசாரியராய், இப்பொழுது தம்முடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவர் பரலோகத்திற்குச் சென்றது போலவே இரத்தத்தினால் கழுவப்பட்டு, இரண்டாம் பிறப்பினைப் பெற்றுள்ள, தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிற ஒரு மகிமையான சபையைப் பெற்றுக்கொள்ளவே திரும்பி வருவார், என்ன ஒரு-என்ன ஒரு தரிசனம்! ஆமென். சரி. "நல்ல வெண்கலம் போல," அல்லது, இப்பொழுது கவனியுங்கள், "அவருடைய மற்றும்..." அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது;(அவ்வளவுதான் கசடு வெளியே எடுக்கப்பட்டது.) அவருடைய சத்தம்.... சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. 211 கவனியுங்கள், இப்பொழுது சபையானது அவரிடத்தில் பேசுகிறது, தண்ணீர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17:15, "தண்ணீர் பருமனையும், திரளான ஜனங்களையும் பொருட்படுத்துகிறது" என்று கூறியுள்ளது. இப்பொழுது, "அவருடைய சத்தம்" அல்லது இந்த விதமாக அங்கு நின்று கொண்டிருந்த இந்த ஜீவன், கிறிஸ்து தம்முடைய சபையில் மணவாட்டியும் கிறிஸ்துவும் ஒன்றாயிருப்பதால், கணவனும் மனைவியும் ஒன்றாயிருப்பது போல; சபையும் கிறிஸ்துவும் ஒரு நபரால், ஒரே பரிசுத்த ஆவியானவரோடு ஒன்று சேர்ந்து உருவாக்கப்படுகின்றனர். 212 கிறிஸ்து செய்த காரியங்களையே சபையும் செய்கிறது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அந்த அழகான சபை அங்கே பரிசுத்தத்திலும், வல்லமையிலும், மகத்துவத்திலும், தரிசனங்களையும், அடையாளங் களையும், அற்புதங்களையும் கண்டது. அவர் செய்த ஒவ்வொரு காரியத்தையும் போலவே, இங்கே அது பூமியில் உள்ளது, எல்லா புகழையும் தேவனுக்கு செலுத்துகிறது, "பிதா எனக்குக் காண்பிப்பதைத் தவிர வேறொன்றையும் என்னால் செய்ய முடியாது; ஆனால் அவர் எனக்குக் காண்பித்தார், இதோ அது உள்ளது" என்றார். இந்தக் காரியங்கள் சம்பவிக்க போகின்றதை, நாம் வந்து, பார்க்கிறோம். 213 இப்பொழுது, கிறிஸ்து, ஒருவராக வார்ப்பிக்கப்பட்டார். ...சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. அந்த ஒருவர் மாத்திரமல்ல, அநேக ஜனங்கள்; அது முழு சபையாயிருந்தது, ஏழு சபைகளும் ஒன்று சேர்ந்து ஒரு மகத்தான மீட்கப்பட்ட கர்த்தருடைய சரீரமாக உருவாக்கப்பட்டன. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பரிசுத்த ஆவியினால் மீண்டும் பிறந்துள்ள யாவரும், தேவனுடைய வல்லமையோடு பேசுதல், அதுதான் சரீரம். அதுதான் சரீரம். தமது வலதுகரத்திலே... 214 "சரி." வேதத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு, பாருங்கள். தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; (இப்பொழுது அவர்-அவர் ஒரு ராஜாவாயிருக்கிறார்): அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. 215 இப்பொழுது, "அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது," கிறிஸ்துவும் சபையும் ஒன்றாயிருக்கிறபடியால், அங்கே நின்றுகொண்டிருக்கிற இந்த வாயிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. 216 "அவர் தம்முடைய கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்." நீங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் பார்ப்பீர்கள்; அது என்னவாயிருந்தது என்பதை வேதம் உரைக்கட்டும், நான் அதற்கு வர விரும்புகிறேன். அது ஏழு சபைக் காலங்களின் ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு ஊழியக்காரர்களாக வெளிவந்தனர், தம்முடைய வலது கரத்தில் அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார். ஆமென். அங்குதான் அவர் இருக்கிறார். ஒவ்வொரு சபைக்கும் ஒருவர், ஏழு தூதர்கள், ஏழு செய்தியாளர்கள் இருந்தனர். புரிகிறதா? 217 அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். ...அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது;... இருபுறமும் கருக்குள்ள கூர்மையான பட்டயம் என்றால் என்ன? எபிரெயர் 4-ம் அதிகாரம், "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனை களையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." சரி. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் யிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (அது இயேசு இப்பொழுது கவனியுங்கள்.) நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும்......... சம்பவிப் பவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் (சரி) என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; ... 218 ஓ ஓ! அதைப் பற்றிக் கொள்ளுங்கள். "ஏழு தூதர்கள் ஏழு ஊழியக்காரர் களாயிருக்கிறார்கள்." எபேசுவில் இருந்த ஒரு தலைவருடைய சபை இருந்தது. இப்பொழுது தேவன் அனுமதித்தால், நாம் இதைத் தொடர்ந்து செய்து, மிருகத்தின் முத்திரையை எடுத்துக் கொள்ளாமல், இந்தக் கடைசி காலம் வரையிலும், அவர்கள் எந்த வழியில் எந்த வழியில் இருந்தனர் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க முடியும்; மெதோடிஸ்டுகளாய் இருந்த பிலதெல்பியா சபையை, ஜான் வெஸ்லி என்று காண்பிக்க முடியும்; தியத்தீரா சபையை, பெர்கமுவுக்குப் பிறகு, அவர்தான் மார்டின் லூத்தர், காலங்கள் தோறும் சென்றது என்பதைக் காண்பிக்க முடியும், செய்தியைக் கொண்டு வந்து, பூமியில் செய்தியை ஸ்தாபித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் காண்பிக்க முடியும். 219 இன்றைக்கு கடைசி செய்தி வரையிலும், அது உண்மை, அங்கே தேவன் வானத்திலிருந்து ஒரு தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனை ரூபகாரப்படுத்தி, ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியை அனுப்பினார். இது ஒரு சபையாக இருக்காது. இந்தக் கடைசி நாட்களில் அது ஒரு ஸ்தாபனமாக இருக்காது. காரணம், தேவன் ஸ்தாபனத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார். அதைக் குறித்து நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறீர்கள். நாளை இரவு நாம் மிருகத்தின் முத்திரை என்பதன் பேரில் பார்த்து முடிக்கும் வரை காத்திருங்கள், உங்களுடைய சபையானது எங்கே உள்ளது என்றும், பாருங்கள், உங்களுடைய ஸ்தாபனங்கள் எங்கே உள்ளது என்றும், பாருங்கள். இப்பொழுது சபைகளைக் கவனியுங்கள். நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். (அவைகளே சபைகளாகும்.) 220 அந்த நட்சத்திரங்களையும், அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது பாருங்கள். நாம் ஒரு நிமிடம் நிறுத்தலாமா? இங்குச் செல்ல எனக்குப் பன்னிரெண்டு நிமிடங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன். எனவே நான் இங்கே இந்த அதிகாரத்திற்கு வர விரும்புகிறேன், வேறொன்றுமில்லையென்றால், அதை முழுவதும் படியுங்கள். நான் இதை உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். ஒரு நட்சத்திரம் ஊழியக்காரனாயிருந்தது, மேலிருந்து வருகிற ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரன். 221 நீங்கள் பரலோகத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்றும், வானத்திலுள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் உங்களைச் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் நீங்கள் உணருகிறீர்களா? தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததி வானத்தின் நட்சத்திரங்களைப் போல் இருக்கும் என்று கூறினார் என்பதை நீங்கள் அறிவீர்களா? முதலில் அவர்கள் பூமியின் மண்ணாயிருந்தனர், அதன்பின்னர் உயிர்த்தெழுதலில் அவர்கள் எண்ணற்ற வானத்தின் நட்சத்திரங்களாயிருந்தனர். நீங்கள் அதை உணர்ந்தீர்களா? 222 இயேசு பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் என்றும், வானத்தின் நட்சத்திரங்கள் அனைத்திலும் மகத்தான நட்சத்திரம் என்றும் உங்களுக்குத் தெரியுமா? ஓ, அல்லேலூயா! நான் அதைக் குறித்து நினைக்கும்போது, என் ஆத்துமா மகிழ்ச்சியில் துள்ளுகிறது. அதோ அவர் இருக்கிறார்! அங்கே அவருடைய ரூபத்தில், அவருடைய பிரசன்னத்தில், நாம் என்றோ ஒரு நாள் அமர்ந்திருப்போம், அல்லேலூயா, இந்தப் பூமிக்குரிய காரியங்கள் ஒழிந்துபோகும்போது, 223 ஆனால், கவனியுங்கள், மற்றொரு வேதவாக்கியம் என்னிடத்தில் வருகிறது. தானியேல் கூறினான்...அவர், "முத்திரை போடு..." என்றார். 224 இந்தத் தூதன் தன்னுடைய தலைக்கு மேல் ஒரு வானவில்லுடன் இறங்கி வருவதை அவன் கண்டபோது, ஒரு பாதத்தைத் பூமியின்மேலும், ஒரு பாதத்தைத் சமுத்திரத்தின் மேலும் வைத்து; தம்முடைய கரங்களை உயர்த்தி, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிட்டார். அந்த ஏழு சத்தங்களும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது...ஏழு இடிமுழக்கங்களும் தங்கள் சத்தங்களை முழங்கின. அவர், "அதை முத்திரைபோடு; கடைசி நாள் வரைக்கும் அறியப்படாது" என்றார். அவர், "ஆனால் இந்தத் தேவரகசியம் நிறைவேற வேண்டிய நேரத்தில், இவைகள் சபைக்கு வெளிப்படுத்தப்படும்போது; இனி காலம் செல்லாது என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர்மேல் ஆணையிட்டுக் கூறினார்" என்றார். 225 அப்பொழுது அவர் அங்கே என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். அவர், "தானியேலே, போகலாம், புஸ்தகத்தை முத்திரைப் போடு" என்றார். பார்த்தீர்களா? "நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய். ஆனால் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்களில் அநேகர் என்றென்றைக்கும் சதா காலங்களிலும் நட்சத்திரங்களைப் பார்க்கிலும் பிரகாசிப்பார்கள்." 226 அங்குதான் நீங்கள், "நட்சத்திரங்கள்," அந்த ஏழு ஊழியர்கள். ஏழு சபைக் காலங்களினூடாக, ஏழு ஊழியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டவை. 227 முதலாம் இரண்டாயிரம் ஆண்டுகளில், ஜலப்பிரளய அழிவு; இரண்டாம் இரண்டாயிரம் ஆண்டுகள், கிறிஸ்துவின் முதலாம் வருகை; மூன்றாம் இரண்டாயிரமாண்டு, ஆறாம் ஆண்டு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாயிருக்கிறது; ஆயிர வருட அரசாட்சி, முடிவு, ஏழாம் நாள் இளைப்பாறுதல். 228 "சபைக்கு..." ஓ, இன்னும் ஒரு சில நிமிடங்கள் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? [சபையோர், "ஆம்" என்கின்றனர்) இப்பொழுது, நான் உங்களைக் களைப்படையச் செய்ய விரும்பவில்லை, ஆனால் நான் இப்பொழுதே துரிதமாகப் படிக்கவுள்ளேன். "தூதனுக்கு..." இப்பொழுது கவனியுங்கள், அவர் இதை இப்பொழுது நேரடியாக உரைக்கிறார். நாம் பெர்கமுவுக்குச் சென்று, அதன்பின்னர் அதைக் குறித்து...நான் பொருட்படுத்திக் கூறுவது, லவோதிக்கேயாவுக்குச் சென்று, அதன்பின்னர் நாம் முடிப்போம். நாளை இரவு நாம் இங்கிருந்து, மிருகத்தின் முத்திரை என்ற தலைப்பில் பேசுவோம். எபேசு சபையின் தூதனுக்கு...(முதலாவது.) 229 இப்பொழுது கவனியுங்கள், இயேசுவானவர் தம்முடைய கரங்களை நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தார். இங்கே ஒரு சிறு காரியத்தை நான் உங்களுக்கு விட்டுவிட விரும்பவில்லை. அதைக் கேளுங்கள். அதைக் கவனியுங்கள். அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். 230 இப்பொழுது, நான் இங்கே நின்று கொண்டிருக்கையில், குத்துவிளக்குகள் வளைந்து கொண்டிருக்கின்றன, இங்கே என்னுடைய ஒரு கையில் நான் அதை வெளியே எடுத்தேன், இங்கே மற்றொன்று சிலுவையின் அடையாளத்தில் உள்ளது, ஏனென்றால் அது சிலுவையினூடாகச் சபையைக் கொண்டு வந்தது. 231 இங்கே அவர் நின்று கொண்டிருக்கிறார்; ஒரு உடன்படிக்கையாக, அவருடைய சிரசின் மேல் ஒரு வானவில் இருந்தது. "நான் சபையோடும், ஆபிரகாமின் மூலமும், அவனுடைய வித்து மூலமாய், அழைக்கப்பட்ட யாவரோடும் என் உடன்படிக்கையை உண்டுபண்ணினேன்." 232 என்னுடைய சகோதரன், அன்றொரு இரவு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள, அவன், "பில், என்னை ஒருபோதும் கட்டாயப்படுத்தாதே" என்றான். "தேவன் என்னிடத்தில் பேசும்போது..." என்றான். நான், "அவர் உன்னை அழைக்கும் வரை நீ வர முடியாது" என்றேன். 233 "என் பிதா அழைத்தாலொழிய ஒருவனும் என்னிடத்தில் வர மாட்டான்." யாரோ ஒருவர் ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறார், அது உங்களை மேலே இழுக்கிறது, அது வேறு யாரோ ஒருவர். ஆனால் பாருங்கள், தேவன் பேசும்போது, நீங்கள் வருவீர்கள். அது உண்மை. அங்கே நின்று..."என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் வரமாட்டான்." 234 அவர் அங்கே நின்றுகொண்டு, "வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத் துக்கும் ஒப்பாயிருந்து, ஆதியும் அந்தமுமாய்," பென்யமீன், ரூபன், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும். எப்படியாய், வேதாகமம், ஒவ்வொரு காரியமும் சரியாக இந்தவிதமாக ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது, ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக உள்ளது! கவனியுங்கள், அவர் அங்கு நின்று கொண்டிருக்கையில், இப்பொழுது நோக்கிப் பார்க்க, என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அவர் "ஆல்பாவும் ஒமெகாவுமாயிருந்தார்" என்று கூறினார். அவரே 'ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். இருந்தவரும், இருப்பவரும், வருகிற வருமானவர்." அவர் தம்முடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை உடையவராயிருந்தார். 235 இப்பொழுது இங்கே அவர் எபேசுவிலே புறப்பட்டுச் சென்று, அவர் குத்துவிளக்கைக் கொளுத்தத் துவங்குகிறார். அவர் அதை அங்கே கொளுத்தினார். அதன்பின்னர் அடுத்த சபைக்காலமானது, அடுத்த சபைக்காலமானது மங்கலாகத் துவங்குகிறது என்பதை நாம் கண்டறிகிறோம்; அடுத்த சபைக்காலமானது இன்னும் சற்று மங்கலாகிறது; நான்காம் சபைக்காலம் வரை, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருளின் காலங்கள்வரை. ஏறக்குறைய 500, 1500-ல் அங்கே, அவர்கள் கடந்து சென்றபோது மங்கத் தொடங்கி, அது கிட்டத்தட்ட அணைந்து போனது. 236 மேலும், கவனியுங்கள், அந்தச் சபைக் காலங்கள் ஒவ்வொன்றிலும், அவர், "நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை. நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை. நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை" என்றார். ஆனால் அவர் இருளின் காலங்களின் மறுபக்கத்தில் வந்தபோது, "நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய்" என்றார். அவள் ஸ்தாபனமாக்கிக் கொண்டாள். அவள் வேறொரு போலியான பெயரை எடுத்துக்கொண்டாள். 237 நாளை இரவு அந்திக்கிறிஸ்து என்றால் என்ன என்பதைக் கவனியுங்கள். அவன் ஒரு போலியான ஞானஸ்நானத்தைப் பெற்றுள்ளான், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று உங்களை விசுவாசிக்கச் செய்கிறான். அவன் ஒரு போலியான தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பெற்றுள்ளான் (ஆம், ஐயா.), அது வேதப் பிரகாரமாகவும் கூட இல்லை. அவன் ஆள்மாறாட்டம் செய்ய, தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும் இருக்க போதுமான எல்லா காரியங்களையும் உடையவனாயிருக்கிறான். 238 அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கவனியுங்கள். சரியாக அங்கே தான் அது துவங்கினது, அதற்குள்ளாகவே; இங்கே இந்த மற்றொரு பக்கத்தில் வெளியே வருகிறது. அப்பொழுது அவர், "உனக்கு ஒரு சிறு வெளிச்சம் உள்ளது" என்றார். லூத்தர். 239 அதன்பின்னர் வெஸ்லி தோன்றினார், அவருடைய காலத்தில் அது எப்படி இருந்தது. அது பிரகாசிக்கத் துவங்குகிறது. 240 அதன்பின்னர் அந்தக் காலத்திற்கும் கடைசி காலத்திற்கும் இடையில், அவர் ஒரு திறந்த வாசலை வைத்தார். உள்ளே வருபவர்களுக்கு அவர் ஒரு திறந்த வாசலை வைத்தார். அதன்பின்னர் அவர், "அவள் வெதுவெதுப்பான நிலையில் சென்றாள்" என்றார். அவர் அதைத் தம்முடைய வாயிலிருந்து வாந்திப் பண்ணிப்போட்டார். மீதியானவர்களை எடுத்துக்கொண்டார், உயிர்த்தெழுதல் உண்டானது, அவர் அவர்களோடு சென்றார். அது உண்மை. 241 இதோ அவர் அவர் ஏழு பொன் குத்துவிளக்குகளில் நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுது: எபேசு சபையின்...எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 242 "உன் கிரியைகளை நான் அறிந்திருக்கிறேன்." நீ மறக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள். உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களை சகிக்கக் கூடாமலிருக்கிறதையும்... அறிந்திருக்கிறேன். 243 நாம் தீமையான எந்தக் காரியத்தையும் பொறுத்துக் கொண்டு, அதை மார்க்கம் என்று அழைக்கிறோம். ஓ, நல்லது, அவர்கள் போகிறார்கள்...நாம் சபைக்குச் செல்கிறோம். நாங்கள் மற்றவர்களைப் போலவே நல்லவர்களாயிருக்கிறோம்." புதன் கிழமை இரவு வீட்டிலேயே தங்கியிருந்து நரகத்தின் குழிகளாகிய தொலைக்காட்சியைப் பார்க்கிறோம். அது உண்மை. நேராக வெளியே சென்று, புகைப்படக் காட்சியைக் கேட்டு, வாகனத்திலிருந்து திரைப்படக் காட்சியைக் காண்கிறோம். மிகவும் உஷ்ணமாயிருக்கிறபடியால், திரைப்படக் காட்சிக்குக் கூட.. பிரசங்கியாரும் கோடைக்காலத்தின் மத்தியில் சபையை மூடிவிடுகிறார். நீங்களோ, "சபைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உஷ்ணமாயுள்ளது" என்று கூறலாம். சகோதரனே, அது நரகத்திற்கு செல்வதைவிட மிகவும் மோசமானதல்ல. இந்நாட்களில் ஒன்றில், அதைக் காட்டிலும் அதிக உஷ்ணமாயிருக்கிற இடத்திற்கு நீங்கள் செல்வீர்கள். நீங்கள் செவிக்கொடுப்பது நல்லது. 244 எப்படி உங்களால் முடியும்? சகோதரனே, நீங்கள் வேண்டுமானால், நீங்கள் ஒரு புறாவைச் செத்த குதிரையைப் புசிக்கச் செய்ய முடியாது. அதனால் அதைச் செய்ய முடியாது. அதனுடைய சுபாவம் வித்தியாசமானது. ஒரு புறாவுக்குப் பித்தப் பை கிடையாது. அதனால் அதை ஜீரணிக்க முடியாது. 245 தேவனுடைய ஆவியினால் மீண்டும் பிறந்த ஒரு மனிதன் அந்தக் காரியங்களைப் புசிக்க முடியாது. அவனால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அது அவனுடைய சிந்தையை விட்டுப் போய்விட்டது. அவனால் அதைச் செய்ய முடியாது. அவனால் முடியாது. 246 நீங்கள் அதை அறிவீர்கள். ஒரே இனப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. மேலும், இன்றைக்கு, உலகமும் சபையும் மிகவும் ஒத்ததாக இருக்கிறது, நீங்கள்...அவர்கள் ஒரேவிதமாகப் பேசுகிறார்கள், அவர்கள் ஒரேவிதமாகக் குடிக்கிறார்கள், அவர்கள் ஒரேவிதமாகப் புகைக்கிறார்கள், அவர்கள் ஒரேவிதமாகச் சாபமிடுகிறார்கள், அவர்கள் ஒரேவிதமாக உடை உடுத்துகிறார்கள், அவர்கள் ஒருவிதமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள், உங்களால் ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கண்டறிய முடியாது, அதே சமயத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட வேண்டும் என்று கருதப்படுகிறீர்கள். 247 சகோதரனே, அது மிகவும் மட்டுமீறியதாய் உள்ளது, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது உங்களுக்கு ஜீவனை அளிக்கும். 248 ஒரு நபர், ஒரு சமயம், ஒரு கூட்ட பிரசங்கிமார்களிடம் சென்றபோது, அங்கே அவர்கள் தீர்க்கதரிசிகளின் பள்ளி என்று அழைக்கப்பட்ட ஒரு வேதாகமப் பள்ளியை வைத்திருந்தனர். அவர்களில் ஒருவன், "இப்பொழுதே இந்தப் பெரிய பானையை வையுங்கள். நாம் உணவு அருந்தப் போகிறோம்" என்றான். "எலியா வந்தான், அவன் உண்மையாகவே இரட்டிப்பான பங்கைப் பெற்ற ஒரு மனிதன்" என்றனர் 249 எனவே அந்த நபர்களில் ஒருவன் சில-சில பட்டாணிகளைப் பறிக்கச் சென்றான், அவன் ஒரு மடி நிறைய பேய்கொமட்டிக் காய்களை எடுத்து, அவைகளை ஒரு பானையில் வைத்து, அதை வேகவைக்கத் தொடங்கினான். ஏன், அவர்கள் சாப்பிடத் தொடங்கினர். அவர்கள், "பானையில் சாவு இருக்கிறது" என்றனர். அது ஏறக்குறைய இந்தச் சில வேதபாட கருத்தரங்குகள் கூடச் சமைக்கலாம். அது உண்மை. "பானையில் மரணம் உண்டு" என்றான். 250 எலியா, "ஒரு நிமிடம் பொறும், நாம் அதைக் குறித்து பார்த்துக்கொள்வோம்" என்றான். அவன் சென்று ஒரு கைப்பிடி நிறைய மாவைக் கொண்டு வந்து, அதை உள்ளே போட்டான், அது காரியங்களை மாற்றினது. மாவு, போஜனபலி, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்," போஜனபலிக்காக அதேவிதமாகவே அரைக்கப்பட்டது, அது வித்தியாசத்தை உண்டுபண்ணியது. நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், பிரசிங்கமார் களையும், அல்லது அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; 251 அதைத்தான் அவர் கூறினார்; நான் அதை ஒருபோதும் கூறவேயில்லை. நான் அவரை மேற்கோள் காட்டுகிறேன். ஆனால் தேவன் என்ன எதிர்பார்க்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? தேவனுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவைப்படுகிறது, இல்லையென்றால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். 252 இரண்டு டி.டி.டி.பட்டங்களையும், எல்.டி பட்டங்களையும், பிஎச்.டி. பட்டங்களையும் பெற்றுள்ள ஒரு மனிதன், மற்றும் இளங்கலைப் பட்டம், மற்றும் அதற்குப் பின்னால் உள்ள மற்ற எல்லாவற்றையும் பெற்றிருந்தும், சில சமயங்களில் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். அது உண்மை. சகோதரனே, அது எந்தக் காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. ஆனால் முழு உலகமும், "நல்லது, நம்முடைய ஊழியக்காரர் தெய்வீகத்தில் பாண்டித்தியம் பெற்றவர்" என்று கூறுகின்றது. ஓ, இரக்கம். தண்ணீர் பருகுவதைப் போல அவைகளுக்கு தேவனோடு எந்தச் சம்மந்தமும் கிடையாது; அவ்வளவு அதிகமாக இல்லை. அது உண்மை. எத்தனை பி.எச்.டி., அல்லது டி.டி. பட்டங்கள் பெற்றிருந்தாலும் தேவன் கவலைப்படுகிறதில்லை. வேதம் என்ன அழைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்...இப்பொழுது, இது ஒரு கேலிக்கூத்து அல்ல, ஏனென்றால் நான் அவைகளை கூறுவதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் வேதாகமம் டி.டி என்ற பெயரை "செத்த நாய்" என்று அழைக்கிறது. "செத்த நாய்" என்றே சரியாக வேதம் கூறியுள்ளது. சரி, "அவர்களால் குரைக்க முடியாது" என்றார். எனவே, அப்படியானால், சரி. நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம்.... 253 ஓ, நான் அதைப் பற்றி ஆழமாகப் படிக்க விரும்புகிறேன், எனவே தேவனுக்கு சித்தமானால், இன்னும் ஒரு சில இரவுகளில் நீங்கள் அதைப் பெறுவீர்கள். இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும்... 254 "நீ அதனோடு தரித்திருந்தாய்." சரி. கவனியுங்கள். உன்பேரில் எனக்குக் குறை உண்டு... 255 இப்பொழுது, இங்கே நான் இப்பொழுது கொஞ்ச நேரம் விட்டுவிட வேண்டும், நாளை இரவு நாம் இதைப் புரிந்து கொள்ளும்படியாக நான் இதைக் கொண்டு வரலாம். ....நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 256 கூடாரத்தோடுள்ள காரியம் என்ன? ஒரு மனிதன், நீங்கள் ஒரு மனிதனை சந்திக்கும்போது, "உங்களுடைய கிறிஸ்தவ அனுபவங்கள், அது உங்களுக்கு எப்பொழுது மிகவும் பிரியமாயிருந்தது?" என்று கூறக் கூடியவராய் இருக்க வேண்டும். நீங்கள், "இப்போதே!" என்று கூறக் கூடியவராக இருக்க வேண்டும். 257 "பாருங்கள், நான் முதலில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டபோது, நான் வந்தபோது, என்னுடைய மிகச் சிறந்த அனுபவமாயிருந்தது. 258 அப்பொழுது, 'ஓ, சகோதரனே, நீர் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்" என்று கூறுங்கள். அது உண்மை. பாருங்கள். நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய்... ஆதியிலே அவர்கள் ஏதோ ஒரு காரியத்தை உடையவர்களாயிருந்து, அதை விட்டுவிட்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது. 259 "துவங்குகிறவன் அல்ல; முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான்." "அவனல்ல...என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனேயல்லாமல், 'கர்த்தாவே! கர்த்தாவே,' என்று சொல்லுகிறவன் அல்ல." ஓ, நான் அதை ஒரு சில நிமிடங்கள் அப்படியே பதிய வைக்கட்டும். எப்படியாயினும் நான் இன்றிரவு வேகமாகப் பேசிக்கொண்டிருந்தேன், அதனால் நாம் அதை ஒரு சில நிமிடங்கள் பதிய வைப்போம், பாருங்கள். "என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்." "முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவனே. சகித்திருக்கிறவனே!" 260 யாராவது, "அவன், அந்த நபர், ஒரு பழைய மாய்மாலக்காரன் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினால். 261 "பாருங்கள், நீங்கள் என்னைக் குறித்து அப்படி நினைத்தால், நான் சபையை விட்டுச் சென்றுவிடுவேன். நான் இனிமேல் அதனோடு எந்தச் சம்மந்தமும் வைத்துக் கொள்ளமாட்டேன்" என்கிறீர்கள். சரி, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. பார்த்தீர்களா? நீங்கள் எதினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. சகோதரனே, அது துவக்கத்தில் ஒரு கோதுமையாக இருந்தால், அது கடைசியில் ஒரு கோதுமையாக இருக்கும். நீங்கள் இங்கு நீண்ட நேரம் தங்கியிருக்கவில்லை. நீங்கள் அந்தக் காரியத்தை ஒருபோதும் சரிபடுத்துவதில்லை. அது உண்மை. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து,... 262 நீங்கள் எவரையும் குறித்து பேசாதிருந்த அனுபவத்தை நீங்கள் திரும்பிச் சென்று நினைவில் கொள்ளுங்கள். சபையில் ஏதோக் காரியம் தவறாக நடந்திருந்தால், நீங்கள் அங்கே உங்களுடைய அண்டை வீட்டாருடைய படிக்கட்டுகளில் அமர்ந்து சபையைக் குறித்து பேசவில்லை, மற்றவர்களைக் குறித்தும் பேசி, தளர்ந்து போய் வேறொரு சபையில் சேர்ந்துகொள்கின்றனர். இல்லை, நீங்கள் அங்கேயே தரித்திருந்து, பொறுமையாக ஜெபித்தீர்கள், தேவன் அதை நிறைவேற்றினார், பாருங்கள். ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி,... 263 "மனந்திரும்புதல்" என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக;... 264 திரும்பிச் சென்று உங்களுடைய ஆதிஅனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆதியில் நீங்கள் ஆதியில் நீங்கள் செய்த காரியங்களையே செய்யுங்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், "பீடத்தண்டைப் போய், அதைத் தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளுங்கள்". அது உண்மை. ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். 265 ஹு-ஹூ, "நீங்கள் மனந்திரும்பவில்லையென்றால், நீங்கள் ஒரு உடைந்த சபையை உடையவர்களாயிருப்பீர்கள், நீங்கள் மனந்திரும்பவில்லையென்றால், அது துண்டு துண்டாகிவிடும்." 266 "ஆனால் இது நீ..." ஓ, இப்பொழுது இதோ நாம் வந்துள்ளோம். இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது உங்களுடைய மதசம்பந்தமான அங்கியை அணிந்து கொண்டு, உங்களுடைய குடையை கீழே எடுத்துக் கொள்ளுங்கள். கவனியுங்கள். ஏனென்றால்... நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 267 "நீங்கள் ஒரு நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறீர்கள்." இப்பொழுது கவனியுங்கள். அடுத்த சபையின் காலத்தில் எபேசுவில் "கிரியைகள்" என்பது ஒரு "போதகமாக" இருந்தது. நாம் நாளை இரவு, "நிக்கொலாய் மதஸ்தரின்" செய்தியை எடுக்கப் போகிறோம். ஆவியானவர் சபைகளுக்குச்சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. 268 இப்பொழுது, அடுத்தது, அடுத்த வசனம் சிமிர்னா சபையிலிருந்து துவங்குகிறது. 269 இப்பொழுது, "நிக்கோலாய்மதஸ்தர்," நாம் நாளை இரவு வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்ட இடத்திலிருந்து துவங்கப் போகிறோம். நிக்கொலாய் ஆசாரியத்துவம், அது எப்படி அங்கே எபேசுவில் துவங்கினது. அங்கேதான் அந்தச் சபைக்காலமானது அதனுடைய ஜீவியத்தின் முந்நூறு ஆண்டுகளில் தோல்வியடைந்துள்ளது. அது இல்லாமல் போவதற்கு முன்பு, நிக்கொலாய் மதத்தினர் ஒரு போதகத்தை, ஒரு சகோதரன் ஆசாரியத்துவத்தை ஆரம்பிக்கத் துவங்கினர். 270 அதன்பின்னர், முதலாவதாக, அது நிக்கொலாவிடமிருந்து வந்தது, அவன் ஒருவராக. .அவன் அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் அவன் சென்று உதவிக்காரர்களைத் தெரிந்துகொண்டார் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இதை எடுத்துக்கொண்டார்கள், அது அங்கே நிக்கோலஸ், அங்கிருந்து தொடங்கி அதை நிக்கொலாய்மதஸ்தர் என்று அழைத்தார்கள், ஒரு ஆசாரியத்துவத்தை ஸ்தாபிக்கத் துவங்கினர். அதிலிருந்து அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதும், அறிக்கைகள் போன்றவற்றின் பேரில் இந்தக் காரியங்களைக் கூறுவதும் "கிரியைகளாக" மாறியது. அதன்பின்னர் அது இங்கே ஒரு "போதகமாக" மாறி, பாபிலோனுக்குள் சென்றது. இங்கே கடைசி நேரத்தில், முழு கிறிஸ்தவமும் அதைச் சுற்றிக் கொண்டது; அதிலிருந்து மீதியானவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும். தேவனுக்கு சித்தமானால், நாளை இரவு அது என்னவென்று கவனித்துப் பாருங்கள். 271 ஓ, என் அருமை சகோதரனே, என் அருமை சகோதரியே, அவர் உங்களை வழுவாதபடிக்கு காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார், உங்களுடைய இருதயத்தை கிருபையில் பற்றிக்கொள்ள வல்லவராயிருக்கிறார், அவர் தம்முடைய ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியச் செய்வாராக. நாம் கடைசி சபைக் காலத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதிருப்பீர்களாக, அது வெதுவெதுப்பான சபைக்காலமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது, அதைக் குறித்து அரைமனதுடன் உள்ளனர். அரைமனதுடன் இருப்பதை நிறுத்துங்கள். உண்மையாகவே உங்களுடைய முழு இருதயத்தோடு கிறிஸ்துவண்டை வாருங்கள். 272 எந்தச் சபையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லை. அது...தேவன் அதை ஒருபோதும் நியாயத்தீர்ப்பில் உங்களிடத்தில் கேட்கமாட்டார். இல்லை ஐயா. நீங்கள் எந்தச் சபையைச் சார்ந்திருந்தாலும் அவருக்குக் கவலையில்லை. 273 நீங்கள் அவருக்கு வேண்டும்; அது ஒரு தனிப்பட்ட நபர். நீங்கள் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் போய்விட்டீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் உண்மையாகவே மீண்டும் பிறந்த அனுபவத்தைப் பெறும் வரையில், நீங்கள் வெறுமனே சபையில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் ஆள்மாறாட்டம் செய்து கொண்டிருக்கிறீர்கள். 274 அங்கே, அங்கே நின்ற அவரை, ஏழு பொன் குத்துவிளக்குகள், ஏழு சபைக்காலங்கள் முழுவதிலும், அங்கே சபையைப் பிரகாசிக்கச் செய்த அதே பரிசுத்த ஆவியானவர், இங்கே அதை விளக்கேற்றுகிறார். 275 இப்பொழுது, அந்தச் சபையில் ஆள்மாறாட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள், இந்த நிக்கொலாய் மதத்தினரும், அது இங்கே இறங்கும் வரை, அது ஒரு பெரிய அமைப்பின் கூட்டமைப்பைப் பெறும் வரை. ஒவ்வொரு சபைக் காலத்தினூடாகவும், பாவனை செய்பவர்கள். தேவன் முழு காரியத்தையும் உதைத்துத் தள்ளிவிட்டு, மீதியான ஜனங்களை மகிமைக்குக் கொண்டு செல்கிறார். 276 கர்த்தர் உங்களைக் ஆசீர்வதிப்பாராக. நண்பர்களே, இது ஒருவிதமான கரடுமுரடானது, ஆனால் இது நல்லது. அது உங்களுக்கு உதவி செய்து, விழுந்து போகாதபடி உங்களைக் காத்துக்கொள்ளும். இப்பொழுது, "சகோதரன் பிரான்ஹாம் என் சபையைக் குறித்து கடினமாகப் பேசிவிட்டார்" என்று கூறாதீர்கள். அது எந்தச் சபையையும் பொறுப்பெடுத்தவில்லை. அது ஒரு தனிப்பட்ட நபராகிய உங்களை மாத்திரமே பொருட்படுத்தியிருந்தது. நான்... 277 நீங்கள் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்திருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு உண்மையான பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பாப்டிஸ்டாக இருங்கள். நீங்கள் மெத்தோடிஸ்டு சபையைச் சேர்ந்திருந்தால், அது என்னவாயிருந்தாலும், ஒரு உண்மையான பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மெத்தோடிஸ்டாக இருங்கள். நீங்கள் கடன் பெற்றவராய் இருக்கமாட்டீர்கள்; தேவனுடைய மகிமைக்காக நீங்கள் எந்தச் சபைக்கும், அல்லது எந்தச் சுற்றுப்புறத்திற்கும் ஒரு நன்மதிப்பைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் விரும்பினால், நாம் நிற்கையில், கர்த்தர் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. 278 அருமையான ஜீவனின் எஜமானே, உம்முடைய வார்த்தையை வாசித்தபிறகு, நாங்கள் பயத்தோடு நிற்கிறோம். இன்றிரவு இந்த வாசிப்பு என்றாவது ஒரு நாள் இருக்கும் என்பதை உணர்ந்து... நியாயத்தீர்ப்பின் நாளிலே, அது இருந்தபடியே, நாம் அதை ஒலிநாடாக்களில் கேட்போம். அதைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் இந்தக் கடைசி காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறதைக் காணும்போது, எங்கும் இருளானது உள்ளது, என்னே ஒரு நேரம். கர்த்தருடைய வருகையையும், அடையாளங்கள் தோன்றுவதையும், "பெரிய அலைகள் எழும்புகின்றன; மனுஷருடைய இருதயங்கள் சோர்ந்து போகின்றன, பயம்; காலத்தின் இடுக்கணும்; தேசங்களுக்கிடையே தத்தளிப்பையும் உண்டாக்குகிறது." 279 அநேகர், "ஓ, நான் அதை அநேக வருடங்களாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதைக் கூறுவார்கள் என்று வேதம் கூறவில்லை, "நம்முடைய பிதாக்கள் நித்திரையடைந்த காலத்திலிருந்தே எந்த வித்தியாசமும் இல்லை" என்று கூறுகிறீர்களா? நாம் வாசலில் இருக்கிறோம் என்பதை அறியாமலிருக்கிறோம். அவர் காலைக்கு முன்பாக வரலாம். 280 பிதாவே, எந்த நாள் அல்லது எந்த மணி நேரம் என்பதை நாங்கள் அறிவோமா, நாங்கள் நடந்து கொண்டிருக்கிற இந்த மிருதுவான வாழ்க்கையின் இழைகள் எங்களுக்கு அடியில் இருந்து தகர்த்து விடும். எங்களுடைய பரிதாபமான ஆத்துமாக்கள் தேவனுடைய வார்த்தையின் பேரிலும், நாங்கள் கேட்டவை, வாசித்தவை என்னவென்பதைக் குறித்த எங்களுடைய மனப்பான்மையின் பேரிலும் தராசில் தொங்கும். 281 கர்த்தாவே, நாங்கள் இப்பொழுது நிறுத்தி, எங்களையே சோதித்துப் பார்க்க வேண்டியதாயுள்ளது. புருஷரும், ஸ்திரீகளும், பையன்களோ அல்லது பெண்களோ, இந்தச் சிறிய கூட்டத்தில் இன்றிரவு இங்கே நல்லறிவோடும், ஆரோக்கியத்தோடும் நின்று கொண்டிருக்கையில், அவர்கள் இப்பொழுது ஆழமாக சிந்திப்பார்களாக. அவர்கள் இன்னும் மறுபடியும் பிறக்கவில்லையென்றால், அவர்கள் இப்பொழுதே அவர்களுடைய இருதயத்தில் "பெந்தெகொஸ்தே நாளில் நீர் அவர்களை நிரப்பின அதே மன்னாவினால் என்னை நிரப்பும் வரை நான் புசிக்கவோ அல்லது குடிக்கவோ மாட்டேன். உலகம் மரித்துப்போகும் வரை, என் ஆண்டவரே, உம்மைத் தவிர மற்ற யாவும் இரண்டாந்தரமாக இருப்பதாக, மற்றெல்லாவற்றின் மீதுள்ள அன்பு மங்கிப்போகும். ஆனால் உலகத்தின் எல்லா அன்பையும் என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும், நான் இந்நாள் முதற்கொண்டு முழுவதுமாக உம்முடையவனாயிருப்பேனாக" என்று கூறுவார்களாக. கர்த்தாவே, அதை அருளும். 282 ஜனங்கள் தங்களுடைய வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களோடிரும். ஓ, தேவனே, எங்கள் தேசத்தில் உள்ள ஏழைகளையும், ஆவியில் எளிமையாயுள்ளவர்களையும், பசியாயிருக்கிறவர்களையும் நினைத்துப் பாரும். 283 தேவனே, எங்கும் ஊழியக்காரர்களை எழுப்பும். அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, கர்த்தாவே, நெருப்புத் துண்டுகளைப் போல, பிரசங்கைக்கும்படி அவர்களை அனுப்பும். எந்த நேரம் என்பதை நாங்கள் அறியோம்.. நாங்கள் இந்த வழியாக ஒருமுறை மாத்திரமே கடந்து செல்கிறோம். நாங்கள் ஒருமுறை மாத்திரமே அழிவுள்ளவர் களாயிருக்கிறோம் அதற்காகத் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் அடுத்த ஜீவியத்தில், அடுத்த ஜீவியத்தில் நாங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கமாட்டோம்; ஆனால் நாங்கள் சுவிசேஷத்தில் களிகூருவோம், காலங்கள் தோறும் அதை ஏற்றுக்கொண்டவர்களோடு; தலைமைத் தளபதியாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் எல்லாவற்றிற்கும் பாத்திரராயிருக்கிறார், எல்லாப் புகழும் அவருக்கு என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். 284 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விரும்பினால், நாம் பிணைக்கிற கட்டுகள் ஆசிர்வதிக்கப்படுவதாக என்ற பாடலைப் பாடுகையில், ஒருவரோடொருவர் திரும்பிக் கரங்குலுக்குங்கள். நம்முடைய இருதயங்கள் கிறிஸ்தவ அன்பில்; கட்டுகிற இணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் அது மேலே உள்ளதைப் போன்றது. எங்கள் பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பாக 285 இப்பொழுது, ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்குங்கள். இப்பொழுது விளக்குகள் தொடர்ந்து எரியப் போவதோ, பத்து நிமிடங்கள் மாத்திரமே. நீங்கள் எல்லோரும் கரங்களைக் குலுக்கி, வீட்டிற்குச் சென்று, களிகூர்ந்து, நாளை இரவு திரும்பி வாருங்கள். சரியாக ஏழு முப்பது மணிக்கு, தேவனுக்கு சித்தமானால், நாம் ஆராதனையை துவங்குவோம். எவ்வளவு அற்புதம்? 68 THE SEVEN CHURCH AGES ஏழு சபைக் காலங்கள் 67